Published:Updated:

பாரத் ஜோடோ யாத்திரையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி; அரசியல் தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட அக்கட்சியின் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி உயிரிழந்திருக்கிறார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி; அரசியல் தலைவர்கள் இரங்கல்!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட அக்கட்சியின் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி உயிரிழந்திருக்கிறார்.

Published:Updated:
காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரி, ராகுல் காந்தி உடனான பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று நடைப்பயணத்தின்போது திடீரென உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பாரத் ஜோடோ யாத்திரை - பஞ்சாப்
பாரத் ஜோடோ யாத்திரை - பஞ்சாப்

செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, வரும் 30-ம் தேதி ஜம்மு - காஷ்மீரின், ஸ்ரீநகரில் யாத்திரையை முடிக்கவிருக்கிறார். இந்த நிலையில், பஞ்சாபின் பில்லூரில் இன்று காலை தொடங்கிய யாத்திரையில் ஜலந்தர் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி, ராகுல் காந்தியுடன் இணைந்து நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது திடீரென அவருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்க அங்கேயே மயங்கினார். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சந்தோக் சிங் சவுத்ரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலறிந்த ராகுல் காந்தி மருத்துவமனைக்கு விரைந்தார். அதைத் தொடர்ந்து சந்தோக் சிங் சவுத்ரியின் திடீர் உயிரிழப்பின் காரணமாக, இன்றைய நாள்முழுவதும் யாத்திரை நிறுத்தப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் எம்.பி  சந்தோக் சிங் சவுத்ரி
காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி

மேலும் இந்தச் செய்தியறிந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ``“ஜலந்தர் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மரணத்தால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கடவுள் ஆசியால் அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.