Published:Updated:

``பக்கோடா விற்பதையும், பஜ்ஜி போடுவதையும் வேலைவாய்ப்பு எனக் கூற மாட்டோம்!" - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் ( P.Chidambaram )

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று `காங்கிரஸ் எக்னாமிக் மாடல்' என்னும் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் கலந்தகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``அரசியல் தலையீடு காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். பக்கோடா விற்பதையும், பஜ்ஜி போடுவதையும் வேலைவாய்ப்பு எனக் கூற மாட்டோம். நாட்டில் ஜி.எஸ்.டி வரி அகற்றப்பட வேண்டும்.

மோடி , ப.சிதம்பரம்
மோடி , ப.சிதம்பரம்
ட்விட்டர்

பசியால் வாடும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 140-வது இடத்திலிருந்து 101-வது இடத்துக்கு வந்திருக்கிறது. சமமற்ற பொருளாதார நிலையை அகற்றுவதை காங்கிரஸ் ஆட்சி மையமாகக் கொண்டு செயல்படும். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!