“கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக ஹெச்.வசந்தகுமார் ஆகி ஒரு வருடம் கடந்துவிட்டது. ஆனால், தொகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை” என்கிறார்கள் தொகுதி மக்கள். இது பற்றி அவரிடமே கேட்டோம்.

“கடந்த ஓர் ஆண்டாக தேசிய நெடுஞ்சாலையைச் செப்பனிடுவது, புதிய நான்குவழிச் சாலைப் பணிகள் என எதுவுமே நடக்கவில்லையே?”

“மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நான்கு முறை சந்தித்து, சபாநாயகரிடம் கெஞ்சிக் கேட்டு தேசிய நெடுஞ்சாலை செப்பனிடும் பணியைக் கொண்டுவந்தேன். இடையில் குடிநீர் வடிகால் வாரியம், சாலையைத் தோண்டிப் போட்டுவிட்டது. இதனால், காலதாமதம் ஆகிவிட்டது. நான்குவழிச் சாலைப் பணி கொரோனாவால் நின்றுவிட்டது.’’

“ஒருவேளை பா.ஜ.க ஏதும் முட்டுக்கட்டை போடுகிறதா?”

‘‘சேச்சே... இல்லை. நிதின்கட்கரியை நான் பார்த்தபோது ‘கட்சி பேதம் இல்லாமல் செயல்படுவோம். உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறோம்’ என்றார். பிரதமரையே போய்ப் பார்க்கிறேன். எனவே, பா.ஜ.க முட்டுக்கட்டை போடவில்லை.”

“ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் செய்ததுபோல பெரிய திட்டம் எதுவும் கொண்டுவரவில்லையே?”

“உண்மைதான். ஏற்றுக்கொள்கிறேன். நான் பொறுப்பேற்ற பிறகு 90 நாள்கள் மட்டுமே நாடாளுமன்றம் நடந்தது. பிறகு நாங்குநேரி இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இப்போது கொரோனா. அனைத்து நிதியும் கொரோனாவுக்கே போய்விட்டது.”

“வரும் சட்டசபைத் தேர்தலுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

“கூட்டணிக் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் அதிக சீட்டுகள் கேட்போம். கடைசி நேரத்தில் சண்டை போடுவதற்குப் பதிலாக இப்போதே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக சீட்டுகளைக் கேட்டு வாங்க வேண்டும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரிடம் சொல்லியிருக் கிறேன். ராகுல் காந்தியிடமும் சொல்லவிருக்கிறேன்.”

“குமரி மாவட்டத்திலுள்ள மூன்று சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் சிலருக்கு, அடுத்த தேர்தலில் சீட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்கிறார்களே?”

‘‘குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ, மக்கள் எதிர்ப்பு இருந்தாலோதான் வேட்பாளர்கள் மாற்றப்படுவர். மற்றபடி காங்கிரஸில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.”

“தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?”

“முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணம். ராணுவத்தினரை நிறுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். நம்மிடம் அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தவில்லை.”

“சாத்தான்குளம் போலீஸார் மீதான இரட்டைக் கொலை வழக்கில் முதல்வரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?”

“தகவல் வந்த உடனேயே முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது. நான் சந்தித்துப் பேசியபோது தூத்துக்குடி கலெக்டரும்,

எஸ்.பி-யும் தங்கள்மீதான தவறை ஒப்புக்கொண்டார்கள். வெளியே வந்த ஐந்து நிமிடங்களுக்குள், ‘இறந்தவர்களுக்கு நோய் இருக்கிறது’ என்று மாற்றி அறிவித்தார்கள். சரியான தகவலை அவர்கள் முதல்வருக்கு அளித்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்னை வளர்ந்திருக்காது.”