Published:Updated:

``இந்தியாவில் பாஜக-வின் 3 `பி' டீம்கள் இருக்கின்றன!" - காங்கிரஸ் எம்.பி குறிப்பிடும் கட்சிகள் எவை?

ஜெய்ராம் ரமேஷ்

``நம் நாட்டில் பா.ஜ.க-வின் 3 `பி' டீம்கள் இருக்கின்றன. அவற்றின் நோக்கமே காங்கிரஸின் வாக்குகளைப் பிரிப்பதுதான்." - ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவரும், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத், கடந்த ஆண்டு ஆகஸ்டில் காங்கிரஸிலிருந்து வெளியேறினார். வெளியேறியதோடு மட்டுமல்லாமல் `ஜனநாயக ஆசாத் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி காங்கிரஸை விமர்சித்துவந்தார்.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

அந்த வரிசையில், ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு வெளியிலிருந்து ஆட்கள் கொண்டுவருவதாக காங்கிரஸை குலாம் நபி ஆசாத் விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி இதற்கு தன்னுடைய பதில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், ``குலாம் நபி ஆசாத்தின் கட்சி இன்னும் பதிவுகூட செய்யப்படவில்லை. அவருடைய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்புகின்றனர். அவரின் கட்சி தற்போது தோடாவில் (ஜம்மு - காஷ்மீரின் மாவட்டம்) மட்டுமே இருக்கிறது. இப்போது அது தோடா ஆசாத் கட்சியாக மாறிவிட்டது.

அசாதுதீன் ஒவைசி, அரவிந்த் கெஜ்ரிவால், குலாம் நபி ஆசாத்
அசாதுதீன் ஒவைசி, அரவிந்த் கெஜ்ரிவால், குலாம் நபி ஆசாத்

நம் நாட்டில் பா.ஜ.க-வின் 3 `பி' டீம்கள் இருக்கின்றன. அவற்றின் நோக்கமே காங்கிரஸின் வாக்குகளைப் பிரிப்பதுதான். அதில் முதலாவதாக இருப்பவர் அசாதுதீன் ஒவைசி (அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்), இரண்டாவதாக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), மூன்றாவது குலாம் நபி ஆசாத்" என்று கூறினார்.