Published:Updated:

``ரஷ்யாவின் நியாயம் வெளிவரவில்லை!" - கார்த்தி சிதம்பரம் ஆதங்கம்

கார்த்தி சிதம்பரம்

``கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பது அபாயமானது. ரஷ்யாவின் வாதம் கேட்கப்படவில்லை" - கார்த்தி சிதம்பரம்

``ரஷ்யாவின் நியாயம் வெளிவரவில்லை!" - கார்த்தி சிதம்பரம் ஆதங்கம்

``கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பது அபாயமானது. ரஷ்யாவின் வாதம் கேட்கப்படவில்லை" - கார்த்தி சிதம்பரம்

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``திமுக அரசு சிறப்பாக, வெளிப்படையாக செயல்படுகிறது. கருத்து கணிப்பு என்பது சாப்பிடாமலேயே சாப்பாடு எப்படி இருக்கிறது என வர்ணிப்பது போன்றதுதான்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த முறை, மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பு பொய்யானது. உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பதில் பாதிப்பு வரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மட்டுமே 30 பேர் உக்ரைனில் படித்து வருகின்றனர். ஆனால், இதுவரை 13 பேர் மட்டுமே வந்துள்ளனர். மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு வந்த மாணவர்கள், மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் போர்

அவர்களை இந்தியாவில் படிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்களை சேர்ப்பது கடினம் என சொல்லியுள்ளனர். இந்தியாவில் இடம் இல்லையென்றால் வேறு நாட்டில் படிக்க வைக்க முடியுமா என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும்.

முக்கியமாக அந்த மாணவர்களின் கடனை ரத்து செய்யவேண்டும். கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பது அபாயமானது. ரஷ்யாவின் வாதம் கேட்கப்படவில்லை. ரஷ்யா போர் தொடுக்க சில காரணம் இருந்தது. நேட்டோ ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு வருவதை அந்த நாடு விரும்பவில்லை.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

உக்ரைன் தரப்பு செய்திகள் மட்டுமே வெளிவருகின்றன. ரஷ்யா தரப்பு நியாயம் செய்தியாக வெளியிடப்படவில்லை. கோவை மாணவரை போல, ஒரு இஸ்லாமிய மாணவர் வேறு நாட்டு ராணுவத்தில் சேர்ந்து இருந்தால் ஜிகாதி என்று சொல்லி இருப்பார்கள்.

உக்ரைன் வெள்ளைக்கார நாடு. அவர்களுக்கு ஒரு பார்வை. அரேபிய நாடுகளுக்கு ஒரு பார்வை என இருக்கக் கூடாது. மாணவர் உக்ரைனுடன் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

சசிகலா இல்லாத அதிமுக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகின்றனர். அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது.

அதிமுக அலுவலகம்
அதிமுக அலுவலகம்

தலைமை ஒருங்கிணைப்பில் இல்லாததுதான் பிரச்னை. மத்திய அரசு பொருளாதாரத்தை நடத்தத் திறமை கிடையாது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். அதற்காக இங்கு தலைமை இல்லை, துணிச்சல் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.