Published:Updated:

``பா.ஜ.க ஏன் நேரு குடும்பத்தினரைக் காங்கிரஸ் தலைமையிலிருந்து வெளியேற்ற விரும்புகிறது?" - மாணிக்கம்

மாணிக்கம் தாகூர்

நேரு குடும்பத்தினரைக் காங்கிரஸ் தலைமையிலிருந்து வெளியேற்ற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஏன் விரும்புகிறது என்றால், அவர்களின் தலைமை இல்லாமல், காங்கிரஸ் ஜனதா கட்சி போல மாறிவிடும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்த நிலையில், அந்தக் கட்சியின் தலைவர்கள் மத்தியில் மனஸ்தாபம் நிலவி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, ``காங்கிரஸ் கட்சியின் தலைமையிலிருந்து காந்தி குடும்பத்தினர் ஒதுங்கிக் கொண்டு, மற்றத் தலைவர்களுக்குக் கட்சியைத் தலைமை தாங்கி வழிநடத்த வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் காங்கிரஸ் கட்சி எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்'' என்று கூறினார்.

கபில் சிபில்
கபில் சிபில்

அவரின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவருக்குப் பதிலளிக்கும் விதமாகக் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நேரு குடும்பத்தினரைக் காங்கிரஸ் தலைமையிலிருந்து வெளியேற்ற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஏன் விரும்புகிறது என்றால், அவர்களின் தலைமை இல்லாமல், காங்கிரஸ் ஜனதா கட்சி போல மாறிவிடும். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியையும், இந்தியாவின் அடையாளத்தையும் அழிப்பது அவர்களுக்குச் சுலபமானது. இது கபில் சிபிலுக்கும் தெரியும். ஆனால், அவர் காந்தி குடும்பத்தைப் பற்றி விமர்சிக்கும் போது ஏன் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மொழியைப் பயன்படுத்துகிறார்" என்று பதிவிட்டிருக்கிறார்.