Published:Updated:

ஸ்டாலினிடமிருந்து தேசியக்கொடியை வாங்கிய ராகுல்... குமரியில் தொடங்கியது பாரத் ஜோடோ யாத்ரா!

பாரத் ஜோடோ யாத்ரா

இந்திய ஒற்றுமை பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து இன்று தொடங்கினார்.

ஸ்டாலினிடமிருந்து தேசியக்கொடியை வாங்கிய ராகுல்... குமரியில் தொடங்கியது பாரத் ஜோடோ யாத்ரா!

இந்திய ஒற்றுமை பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து இன்று தொடங்கினார்.

Published:Updated:
பாரத் ஜோடோ யாத்ரா

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து இன்று தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரை மொத்தம் 3,500 கி.மீ தூரம் 150 நாள்களில் நடந்து சென்றடைகிறார்.

ராகுல்
ராகுல்

பாரத் ஜோடோ யாத்ரா நிகழ்ச்சிக்காக நேற்று மாலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்தி, இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சென்றார். அங்கு அவரின் தந்தையும், முன்னாள் பாரத பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ராகுல்
ராகுல்

பின்னர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். பின்னர் கன்னியாகுமரியிலிருந்து தனி படகு மூலம் கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

பாரத் ஜோடோ யாத்ரா
பாரத் ஜோடோ யாத்ரா

பின்னர் கடற்கரையில் அமைந்திருக்கும் காந்தி நினைவு மண்டபத்திலும் அஞ்சலி செலுத்தினார். காந்தி மண்டபம் முன் நடந்த பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து இந்திய ஒற்றுமை பாதயாத்திரையைத் தொடங்கி வைத்தார். காந்தி மண்டபத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தூரத்தில் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் மேடைக்கு நடந்து வந்த ராகுல் காந்தி, இன்றும் சற்று நேரத்தில் கடற்கரைச் சாலையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பேசவிருக்கிறார்.

ஸ்டாலின் - ராகுல்
ஸ்டாலின் - ராகுல்

பின்னர் அங்கிருந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இன்று இரவு தங்குகிறார். நாளை காலை 7 மணிக்கு அங்கிருந்து நடைப்பயணத்தைத் தொடர்கிறார்.