Published:Updated:

``என் ரத்தம் தமிழக மண்ணில் கலந்திருப்பதால், நானும் தமிழன் தான்" - சென்னையில் ராகுல் காந்தி பேச்சு!

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி

``அவர்கள் வரலாற்றை எதிர்த்தும் பாரம்பர்யத்தை எதிர்த்துப் போரிட்டு கொண்டிருக்கிறார்கள். அதனால், தோற்றுக் கொண்டேதான் இருப்பார்கள்" - ராகுல் காந்தி

``என் ரத்தம் தமிழக மண்ணில் கலந்திருப்பதால், நானும் தமிழன் தான்" - சென்னையில் ராகுல் காந்தி பேச்சு!

``அவர்கள் வரலாற்றை எதிர்த்தும் பாரம்பர்யத்தை எதிர்த்துப் போரிட்டு கொண்டிருக்கிறார்கள். அதனால், தோற்றுக் கொண்டேதான் இருப்பார்கள்" - ராகுல் காந்தி

Published:Updated:
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முதல்முறையாக தன் வாழ்க்கை வரலாற்றை `உங்களில் ஒருவன்' எனும் எனும் தலைப்பில் தானே புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் பின்பக்க அட்டையில், "சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழி நடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர். இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள் தான் என்னைச் செதுக்கியவர்கள்" என ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழாவானது சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா

தி.மு கழக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் தலைமையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தி.மு.க எம்.பி கனிமொழி, டி.ஆர். பாலு மற்றும் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க அமைச்சர்கள், கழக தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின் - ராகுல்
ஸ்டாலின் - ராகுல்

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, 'உங்களில் ஒருவன்' நூலை வெளியிட்டார். பின்னர் மேடையில் பேசிய ராகுல், ``ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று என் தாயாரிடம் கேட்டேன். ஒரு 58 அல்லது 60 இருக்கும் என அவர் சொன்னார். மு.க.ஸ்டாலின் வயது 69 என்று நான் சொன்னேன். ஆனால், என் அம்மா நம்ப மறுத்துவிட்டார். பின்னர் அவர் கூகுளில் தேடி செய்து பார்த்துவிட்டுதான் ஆமாம் என ஒப்புக்கொண்டார். என்னை அறியாமலேயே பலமுறை தமிழ்நாட்டைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். நான் நாடாளுமன்றத்தில் வெளியே வந்தபோது பத்திரிகையாளர் ஒருவர் தமிழ்நாட்டைப் பற்றி அதிகமான முறை பேசினீர்கள் என்று கேட்டார். அந்த பத்திரிகையாளர் கேட்ட போதுதான் அதை உணர்ந்தேன். அப்போதுதான், `நானும் தமிழனே!' என்றேன். பின்னர் தான், நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. தமிழ் மொழியில் பேசுவது இல்லை.. 3,000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் உடைய மொழி. நீங்கள் எப்படி தமிழர் என்று சொல்லலாம் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.

ராகுல்
ராகுல்

என் ரத்தம் தமிழக மண்ணில் கலந்திருப்பதால், நானும் தமிழன் தான். தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. இதை என் அடி மனதில் இருந்து கூறுகிறேன். பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் பொருள் புரியாமலே பேசுகிறார். தமிழகத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல் தமிழகத்தைப் பற்றி எப்படி பேச முடியும். தமிழக வரலாறு மட்டுமல்லாமல் இந்தியாவின் வரலாறையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது. நம்முடைய அமைப்பில் மக்களுடைய குரல் தான் ஒலிக்கவேண்டும். அவர்கள் வரலாற்றை எதிர்த்தும் பாரம்பர்யத்தை எதிர்த்தும் போரிட்டு கொண்டிருக்கிறார்கள். அதனால், தோற்றுக் கொண்டே தான் இருப்பார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism