Published:Updated:

``ஸ்வெட்டர் போடணும்னு நினைப்பேன்; ஆனால், அந்த 3 ஏழைச் சிறுமிகள்..!" - ராகுல் கூறும் காரணமென்ன?

ராகுல் காந்தி

``யாத்திரையின்போது ஒருநாள் மூன்று ஏழைச் சிறுமிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களைப் பிடித்தபோது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்." - ராகுல் காந்தி

``ஸ்வெட்டர் போடணும்னு நினைப்பேன்; ஆனால், அந்த 3 ஏழைச் சிறுமிகள்..!" - ராகுல் கூறும் காரணமென்ன?

``யாத்திரையின்போது ஒருநாள் மூன்று ஏழைச் சிறுமிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களைப் பிடித்தபோது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்." - ராகுல் காந்தி

Published:Updated:
ராகுல் காந்தி

இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமாகக் குளிர் வாட்டி வதைப்பதால், வட மாநிலங்கள் முழுவதும் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. இப்படியிருக்க, பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டிசம்பர் 26-ம் தேதி காலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில்  ராகுல் காந்தி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி

இது இணையதளங்களில் பேசுபொருளானது. இன்னொருபக்கம் டி-ஷர்ட்டை வைத்து ராகுலை பா.ஜ.க-வினர் விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில், குளிரிலும் ஸ்வெட்டர் அணியாமல் வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்துகொண்டு யாத்திரை செல்வதற்கான காரணத்தை ராகுல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹரியானாவில் ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல், ``ஏன் இந்த வெள்ளை நிற டி-ஷர்ட் மட்டுமே அணிந்துவருகிறீர்கள், உங்களுக்கு குளிரவில்லையா என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அதற்கான காரணத்தை நான் சொல்கிறேன். யாத்திரையைத் தொடங்கும்போது கேரளாவில் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது. ஆனால், மத்தியப் பிரதேசத்துக்குள் நாங்கள் நுழைந்தபோது கொஞ்சம் குளிராக இருந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ட்விட்டர்

அங்கு யாத்திரையின்போது ஒருநாள் மூன்று ஏழைச் சிறுமிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களைப் பிடித்தபோது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். சரியான உடை கூட அணிந்திருக்கவில்லை. அன்றுதான், இனி குளிரில் நடுங்கும்வரை டி-ஷர்ட் மட்டுமே நான் அணிவேன் என்று முடிவெடுத்தேன். எனவே, நான் குளிரில் நடுங்கும்போது ஸ்வெட்டர் அணிந்துகொள்ளலாம் என்று நினைப்பேன். இதன்மூலம் அந்த மூன்று சிறுமிகளுக்கும், `நீங்கள் குளிருது என்று உணர்ந்தால், ராகுலும் குளிரில்தான் இருப்பார்' என்ற ஒரு செய்தியை சொல்கிறேன்" என்று கூறினார்.