Published:Updated:

குஜராத் எம்.எல்.ஏ கைது: ``மோடி ஜி உங்களால் உண்மையை ஒருபோதும் சிறைவைக்க முடியாது!" - ராகுல் காந்தி

ராகுல் காந்தி - நரேந்திர மோடி

குஜராத் எம்.எல்.ஏ-வும், இளம் பட்டியலினத் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, அஸ்ஸாம் காவல்துறையினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.

குஜராத் எம்.எல்.ஏ கைது: ``மோடி ஜி உங்களால் உண்மையை ஒருபோதும் சிறைவைக்க முடியாது!" - ராகுல் காந்தி

குஜராத் எம்.எல்.ஏ-வும், இளம் பட்டியலினத் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, அஸ்ஸாம் காவல்துறையினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
ராகுல் காந்தி - நரேந்திர மோடி

குஜராத் மாநிலம் வட்கம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ-வான ஜிக்னேஷ் மேவானி, பலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் அஸ்ஸாம் காவல்துறையினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பாக, ஜிக்னேஷ் மேவானி மீது குற்றச் சதி, சமூகங்களுக்கு இடையே பகையை ஊக்குவித்தல் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய மேவானியின் உதவியாளர் சுரேஷ் ஜாட், சில நாள்களுக்கு முன்னர் மேவானி பதிவிட்டிருந்த ட்வீட் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மேவானி நேற்றிரவு கைதுசெய்யப்பட்டவுடன் முதலில் அகமதாபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விமானம் மூலம் இன்று காலை அஸ்ஸாமுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறியிருந்தார். இருப்பினும், மேவானியைக் கைது செய்தது குறித்து காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக ஏன் கைது செய்தார்கள்... என்ன வழக்கு என்பது பற்றி எதுவும் கூறவில்லை என காங்கிரஸ் தரப்பினர் கூறிவருகின்றனர்.

ஜிக்னேஷ் மேவானி
ஜிக்னேஷ் மேவானி

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஜிக்னேஷ் மேவானியின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில், ``மோடி ஜி, நீங்கள் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி கருத்து வேறுபாடுகளை நசுக்க முயலலாம். ஆனால் உங்களால் உண்மையை ஒருபோதும் சிறைவைக்க முடியாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதே போல காங்கிரஸும் அதன் ட்விட்டர் பக்கத்தில், ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக கைது செய்திருப்பது, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பது போலாகும்" என இந்தியில் ட்வீட் செய்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இளம் பட்டியலினத் தலைவரான ஜிக்னேஷ் மேவானி, குஜராத்தின் வட்கம் தொகுதியில் சுயேச்சை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருப்பினும் கடந்தாண்டு முதல் இவர் காங்கிரஸுக்கு ஆதரவளித்து வருகிறார். இவரின் ட்வீட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், இவர் பதிவிட்ட ட்வீட்டுகள் மோடி, கோட்சே ஆகியோரைப் பற்றியவை எனக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism