Published:Updated:

அதிகாரம் பொருந்திய செயற்குழுவை அறிவித்த சோனியா... பிரசாந்த் கிஷோர் வியூகத்தின் நிலை என்ன?!

சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி

2024 தேர்தல் வியூக அறிக்கையை பிரசாந்த் கிஷோர் சமர்ப்பித்திருக்கும் அதேவேளையில், பிரசாந்த் கிஷோர் முன்னர் தலைமை வகித்த ஐ-பேக் நிறுவனம், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

அதிகாரம் பொருந்திய செயற்குழுவை அறிவித்த சோனியா... பிரசாந்த் கிஷோர் வியூகத்தின் நிலை என்ன?!

2024 தேர்தல் வியூக அறிக்கையை பிரசாந்த் கிஷோர் சமர்ப்பித்திருக்கும் அதேவேளையில், பிரசாந்த் கிஷோர் முன்னர் தலைமை வகித்த ஐ-பேக் நிறுவனம், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

Published:Updated:
சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி

2024 மக்களவைத் தேர்தல், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார். அதில் காங்கிரஸில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தாகத் தகவல்கள் வெளியாகின. இந்த அறிக்கையை, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியால் அமைக்கப்பட்ட குழு ஒன்று ஆய்வு செய்துவருகிறது. இந்த அறிக்கை மீது, இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில், தெலங்கானாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளுங்கட்சியான டி.ஆர்.எஸ்-ஸுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் முன்னர் தலைமை வகித்த ஐ-பேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது காங்கிரஸில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், காங்கிரஸின் டெல்லி தலைமையிலிருந்து எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. ஐ-பேக் நிறுவனத்தின் பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டாலும், மறைமுகமாக பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை வழங்கிவருவதாக சொல்லப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், மூன்று நாள் ஆலோசனைக் கூட்டமாக மே 13 முதல் மே 15 வரை ராஜஸ்தானின் உதய்பூரில் `நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்' என்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தில், சுமார் 400 காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 2024 தேர்தல் தொடர்பாக காங்கிரஸில் அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழு ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸின் தகவல் தொடர்புத்துறைத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருக்கிறார்.

மேலும், மூன்று நாள் `நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்' ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை உட்பட பல தீர்மானங்களை வரைவதற்கு ஆறு குழுக்களை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த ஆறு குழுக்களில், அரசியல் தொடர்பான தீர்மான வரைவுக்குழுவுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்குவதாகவும், பொருளாதார நிலைமை குறித்தான தீர்மான வரைவுக் குழுவுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தலைமை தாங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism