Published:Updated:

பி.கே-வைச் சேர்த்தால் பிரகாசமான எதிர்காலமா?

பிரசாந்த் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாந்த் கிஷோர்

இந்த மாதத்தில் மட்டும் சோனியாவை நான்கு முறைக்கு மேல் சந்தித்துப் பேசியிருக்கிறார் கிஷோர். அதன்பிறகு, ராகுல் காந்தியைத் தனியாகவும், பிரியங்கா காந்தியைத் தனியாகவும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

பி.கே-வைச் சேர்த்தால் பிரகாசமான எதிர்காலமா?

இந்த மாதத்தில் மட்டும் சோனியாவை நான்கு முறைக்கு மேல் சந்தித்துப் பேசியிருக்கிறார் கிஷோர். அதன்பிறகு, ராகுல் காந்தியைத் தனியாகவும், பிரியங்கா காந்தியைத் தனியாகவும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாந்த் கிஷோர்

நூற்றாண்டுகளைக் கண்ட கட்சி, எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆண்ட இயக்கம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆண்ட கட்சி என்றெல்லாம் வரலாற்றில் எழுதப்படும் ஓர் இயக்கமாகப் பெருமைகொண்ட காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலையோ ரொம்பவே பரிதாபம். முந்தாநேற்று ஆரம்பித்த ஆம் ஆத்மியும் இரண்டு மாநிலங்களை ஆள்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களும் இரண்டுதான். இதை மாற்ற, முள்ளை முள்ளால் எடுப்பதைப்போல் 2014-ல் மோடியைப் பிரதமர் அரியணையில், அமரவைத்த அதே பிரசாந்த் கிஷோரைப் பயன்படுத்த நினைக்கிறது காங்கிரஸ்.

பி.கே-வைச் சேர்த்தால் பிரகாசமான எதிர்காலமா?

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரசாந்த் கிஷோர் தரப்பு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தது. அப்போது பிரசாந்த் கிஷோர் “காங்கிரஸ் கட்சிக்கு நான் பணியாற்ற வேண்டும் என்றால், கட்சியில் எனக்கு உயர்ந்த பொறுப்பினை வழங்கவேண்டும்” என்று கட்சியின் மேலி்டத்திடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்குக் கட்சித் தலைமை ஒப்புக்கொள்ளாமல் போகவே, பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மம்தா தலைமையில் ஓர் அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை அடுத்து பிரசாந்த் கிஷோரைக் கட்சிக்குள் கொண்டுவரப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த மாதத்தில் மட்டும் சோனியாவை நான்கு முறைக்கு மேல் சந்தித்துப் பேசியிருக்கிறார் கிஷோர். அதன்பிறகு, ராகுல் காந்தியைத் தனியாகவும், பிரியங்கா காந்தியைத் தனியாகவும் சந்தித்துப் பேசியிருக்கிறார். முதல்கட்டச் சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் தரப்பில் தனக்கு காங்கிரஸ் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியைத் தரவேண்டும் என்று கேட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்கெனவே பல குளறுபடிகள் உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குள் காந்தி குடும்பத்திற்கு எதிராக ஜி 23 என்கிற பெயரில் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், கபில் சிபில் உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் பிரசாந்த் கிஷோருக்குப் பொதுச்செயலாளர் பதவியை அளிக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

பி.கே-வைச் சேர்த்தால் பிரகாசமான எதிர்காலமா?

மேலும், ‘`உங்களைக் கட்சியில் சேர்த்தால் 2024-ம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகும் கட்சியில் இருப்பீர்களா?” என்று காங்கிரஸ் தலைவர்கள் கிஷோரைக் கேட்டுள்ளனர்.இதற்கு “நான் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிப்பது உங்கள் செயல்பாடுகளைப் பொறுத்தது” என்று கிஷோர் பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் கிஷோர்மீது காட்டும் இந்த அச்சத்திற்குக் காரணமும் உண்டு. ஏற்கெனவே பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றிய போது அந்தக் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் அவரை அமர்த்தி அழகுபார்த்தார் நிதிஷ். ஆனால் பீகாரில் நிதிஷ் ஆட்சிக்கு வந்தபிறகு கிஷோருக்கும் நிதிஷ்குமாருக்கும் ஈகோ அதிகரிக்கவே, நிதிஷ் குமார் கட்சியிலிருந்து வெளியேறிய கிஷோர், ஒருகட்டத்தில் நிதிஷ் குமாரை வீழ்த்துவதற்கே வியூகம் வகுத்தார். எனவேதான் கிஷோரின் காங்கிரஸ் பாசம் நிலைக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளார்கள் மூத்த தலைவர்கள். ஆனாலும் மோடி முதல் ஸ்டாலின் வரை பலரை வெற்றிபெற வைத்தவர் என்ற முறையில் பிரசாந்த் கிஷோரை நம்ப வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸுக்கு.

பி.கே-வைச் சேர்த்தால் பிரகாசமான எதிர்காலமா?

சுமார் 300 ஸ்லைடுகளைக் கொண்டு பவர்பாயின்ட் பிரசன்டேசனை கிஷோர் காங்கிரஸ் தலைமைக்கு அளித்துள்ளார். காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டிய மாநிலங்கள், கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய மாநிலங்கள், யார் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பதுபோன்ற விவரங்கள் இந்த பிரசன்டேசனில் இருந்ததாம். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், முறையாகத் தேர்தல் நடத்திப் புதியவர்களைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும், கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பவர்களின் குறைகளைக் களைய வேண்டும், கட்சியின் அகில இந்தியத் தலைமையிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் எல்லாம் 2023-க்கு மத்தியில் முடித்தால் மட்டுமே அடுத்த ஒரு ஆண்டை தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியும் என்று பல ஆலோசனைகளை அடுக்கியுள்ளாராம் கிஷோர்.

பி.கே-வைச் சேர்த்தால் பிரகாசமான எதிர்காலமா?

இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஆறு மண்டலங்களாகப் பிரித்துள்ள கிஷோர், ஒவ்வொரு மண்டலத்திற்கும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரையும், ஐ-பேக் சார்பில் ஒருவரையும் பொறுப்பாளராக நியமிக்க ஆலோசனை அளித்தாராம். மேலும், டெல்லி தலைமையிடத்தில் 12 பேர் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு டீம் அமைக்கப்பட வேண்டும். இந்த டீமில் கிஷோர், பிரியங்கா காந்தி, வேணுகோபால் உள்ளிட்டவர்கள் இருப்பார்கள். சோனியாவோ, ராகுல் காந்தியோ இந்தக் குழுவில் இடம்பெறமாட்டார்கள். அதே போல் காந்தி குடும்பத்திடம் காங்கிரஸ் தலைமைப் பதவி இருந்தாலும், அதிகாரமிக்க செயல் தலைவர் என்கிற பதவி உருவாக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு மூத்த தலைவர் ஒருவரை நியமிக்கவும் ஆலோசனை கொடுத்துள்ளார். இதன்மூலம் சோனியா குடும்பத்தினருக்கு எதிராக உள்ளவர்களையும் கட்சிக்குள் சரிகட்ட முடியும் என்பது கிஷோரின் திட்டம்.

பி.கே-வைச் சேர்த்தால் பிரகாசமான எதிர்காலமா?
பி.கே-வைச் சேர்த்தால் பிரகாசமான எதிர்காலமா?

பா.ஜ.க அசுரபலத்தைப் பெற்றிருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சி தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் சோனியா குடும்பம் தொடர்ந்து காங்கிரஸ் வளர்ச்சியில் கவனம் செலுத்துமா, கிஷோர் கட்சிக்குள் வந்தால் மற்ற தலைவர்களை ஓரங்கட்டுவாரா, கூட்டணிக்கட்சிகளின் நிலை என்ன என்று பல கேள்விகள் காங்கிரஸ் முன் இருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism