Published:Updated:

உத்தரப்பிரதேசம்: பாஜக-வில் இணைந்த காங்கிரஸ் `பிரசார நாயகி’... யார் இந்த பிரியங்கா மௌரியா?!

பிரியங்கா மௌரியா

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரபல பிரசார நாயகியாக அறியப்பட்ட பிரியங்கா மௌரியா பாஜக-வில் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசம்: பாஜக-வில் இணைந்த காங்கிரஸ் `பிரசார நாயகி’... யார் இந்த பிரியங்கா மௌரியா?!

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரபல பிரசார நாயகியாக அறியப்பட்ட பிரியங்கா மௌரியா பாஜக-வில் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பிரியங்கா மௌரியா

உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட `நான் ஒரு பெண்... என்னால் போராட முடியும்' என்ற வாசகத்துடன் உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலமானவர் பிரியங்கா மௌரியா. இதன் மூலமாகப் பல பெண்களை ஈர்த்தவர்.

பிரியங்கா மௌரியா
பிரியங்கா மௌரியா

தற்போது உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடந்த 15-ம் தேதி முதல் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் 40 சதவிகிதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா மௌரியாவுக்கு காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியுடன் இருந்த பிரியங்கா, லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் சென்று பாஜக-வில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ``நான் களத்தில் அதிகம் பணியாற்றியுள்ளேன். எனக்கு சீட் வழங்குவது குறித்து முன்பே திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் எனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறினர். ஏதோ சதி நடந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

பி.ஜே.பி
பி.ஜே.பி

சமீபத்தில் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் டெல்லியில் பாஜக-வில் இணைந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருவர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism