Published:Updated:

``காந்தி குடும்பத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளைப் பாதுகாக்கவே டெல்லி போராட்டம்” - ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

``காந்தி குடும்பத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளைப் பாதுகாக்கவே டெல்லி போராட்டம்” - ஸ்மிருதி இரானி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

Published:Updated:
ஸ்மிருதி இரானி

நேஷனல் ஹெரால்டு நாளிதழை ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவருக்கும் சொந்தமான யங் இந்தியா கம்பெனியால் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில், ராகுல் காந்தி 13-ம் தேதி (இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஒன்று திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியினர் பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் போராட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சில காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை போலீஸார் கைதுசெய்தனர். அதன் பிறகு ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். ராகுல் காந்தியிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ட்விட்டர்

இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருப்பதாவது, `` காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராட்டம் நடத்தவில்லை. காந்தி குடும்பத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளைப் பாதுகாக்கவே டெல்லியில் போராட்டம் நடத்துகிறது. மேலும், காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ஊழல் அம்பலமாகிவிட்டதால், புலனாய்வு அமைப்புக்கு வெளிப்படையாக அழுத்தம் கொடுக்க தெருக்களில் இறங்கினர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் காந்தி குடும்பத்தினர் தற்போது நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் ஆர்வம் காட்டுவது ஏன்?'' எனக் கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism