Published:Updated:

`பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசாங்கம் தேசத்துரோகம் செய்துவிட்டது' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ராகுல் காந்தி - காங்கிரஸ்

பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசாங்கம் தேசத் துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

`பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசாங்கம் தேசத்துரோகம் செய்துவிட்டது' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசாங்கம் தேசத் துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Published:Updated:
ராகுல் காந்தி - காங்கிரஸ்

பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசாங்கம் தேசத் துரோகம் செய்திருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் மற்றும் பல பிரபலங்கள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரின் செல்போன் எண்களும் இடம்பெற்றிருந்தன. இந்தச் செய்தி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

'பெகாசஸ்'
'பெகாசஸ்'
Pixabay

இந்த நிலையில், இந்திய அரசாங்கம் பெகாசஸ் மென்பொருளை 2017-ம் ஆண்டு இஸ்ரேலிடமிருந்து விலை கொடுத்து வாங்கியதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், இந்திய பிரதமர் மோடி 2017-ம் ஆண்டு, இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றதாகவும், அந்தப் பயணத்தின்போது ஏவுகணை அமைப்பு, பெகாசஸ் உளவு மென்பொருள் ஆகியவை அடங்கிய 2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்துக்கு இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் இந்தத் தகவல் இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில், ``இந்தியாவில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு இந்த பெகாசஸ் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது. அரசாங்க அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆயுதப்படைகள், நீதித்துறை என அனைவரும் குறிவைக்கப்பட்டுள்ளனர். பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசாங்கம் தேசத்துரோகம் செய்துவிட்டது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism