Published:Updated:

``முட்டாளுக்கு பதில் சொல்வது சரியானதல்ல..!" - மம்தாவை சாடிய காங்கிரஸ் தலைவர்

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி

``காங்கிரஸ் இல்லையென்றால் மம்தா பானர்ஜி போன்றவர்கள் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள். இதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்" - மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி

``முட்டாளுக்கு பதில் சொல்வது சரியானதல்ல..!" - மம்தாவை சாடிய காங்கிரஸ் தலைவர்

``காங்கிரஸ் இல்லையென்றால் மம்தா பானர்ஜி போன்றவர்கள் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள். இதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்" - மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி

Published:Updated:
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் படுதோல்வியைத் தழுவியது. காங்கிரஸின் இந்த நிலையை பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில்கூட கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``பா.ஜ.க-வை எதிர்த்துப் போராட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நடக்க வேண்டும். காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது" என கூறியிருந்தார். இந்த நிலையில், மம்தாவின் இந்த கூற்றுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரான ரஞ்சன் சவுத்ரி, ``முட்டாளுக்கு பதில் சொல்வது சரியானதல்ல. காங்கிரஸுக்கு இந்தியா முழுவதும் 700 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகளில் 20 சதவிகிதம் காங்கிரஸிடம் உள்ளது. அது அவருக்கு உண்டா? காங்கிரஸுக்கு எதிராக ஏன் கருத்து கூறுகிறீர்கள்? காங்கிரஸ் இல்லையென்றால் மம்தா பானர்ஜி போன்றவர்கள் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள். இதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். பா.ஜ.க-வை மகிழ்விக்க கோவா சென்றார்கள், காங்கிரஸை தோற்கடிக்கச் செய்தார்கள். கோவாவில் காங்கிரஸை பலவீனப்படுத்தினீர்கள். இது அனைவருக்கும் தெரியும்" என மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி தலைமையில், டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.