Published:Updated:

மத்தியில் பாஜக-வின் 8 ஆண்டுக்கால ஆட்சி; ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட காங்கிரஸ்!

அஜய் மக்கன் - ரன்தீப் சுர்ஜேவாலா ( ட்விட்டர் )

`மோடி அரசின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டில் சுமார் 10,000 மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன.' - காங்கிரஸ்

மத்தியில் பாஜக-வின் 8 ஆண்டுக்கால ஆட்சி; ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட காங்கிரஸ்!

`மோடி அரசின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டில் சுமார் 10,000 மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன.' - காங்கிரஸ்

Published:Updated:
அஜய் மக்கன் - ரன்தீப் சுர்ஜேவாலா ( ட்விட்டர் )

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க ஆட்சி எட்டு ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி `8 சால் 8 சல், பாஜ்பா சர்க்கார் விபால்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் டெல்லியில் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இருவரும், ``மோடி அரசின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டில் சுமார் 10,000 மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. மதத்தை முன்வைத்து எங்கு வன்முறை, கலவரங்கள் நடந்தாலும் பா.ஜ.க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதில் தொடர்புகொண்டிருக்கிறது. இது நம் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால், இதுதான் பா.ஜ.க-வின் செயல்திட்டம்.

பாஜக -மோடி, அமித் ஷா
பாஜக -மோடி, அமித் ஷா

ஒன்றன் பின் ஒன்றாக பா.ஜ.க-வின் பேரழிவுக் கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சிக்குக் காரணமாகின. ஒருகாலத்தில் வேகமாக வளர்ந்துவந்த பொருளாதாரம், தற்போது பா.ஜ.க-வின் எட்டு ஆண்டுக்கால தவறான ஆட்சியால் பெரும் சரிவில் இருக்கிறது. பா.ஜ.க அரசு தனது நாட்டின் மக்களை ஏமாற்றுவதில் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

முதலில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதன் மூலம் கலால் வரியை அதிகரித்து, பின்னர் அதைக் கொஞ்சம் குறைத்து, மக்கள் சார்பான அரசாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றுவருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. 45 ஆண்டுக்கால இந்தியாவின் சாதனையை பா.ஜ.க முறியடித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பாஜக
பாஜக

குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்துவருகிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறது. அந்நியக் கையிருப்பும் சரிந்துவருவதால், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது” என்று தெரிவித்தனர்.