Published:Updated:

சாஃப்ட் இந்துத்துவா: ``மோடிக்குதான் சாதகமாக முடியும்” - காங்கிரஸின் ஏ.கே.அந்தோணி

ராகுல் காந்தி - மோடி

``காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தியர்கள் இந்தியர்கள் அல்ல, பெரும்பான்மையினர், சிறுபான்மையினர், இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்." - அமித் மால்வியா

சாஃப்ட் இந்துத்துவா: ``மோடிக்குதான் சாதகமாக முடியும்” - காங்கிரஸின் ஏ.கே.அந்தோணி

``காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தியர்கள் இந்தியர்கள் அல்ல, பெரும்பான்மையினர், சிறுபான்மையினர், இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்." - அமித் மால்வியா

Published:Updated:
ராகுல் காந்தி - மோடி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தலைமையில் நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் விதமாக `பாரத் ஜோடோ' யாத்திரை நடைபெற்றுவரும் நிலையில், 2024 தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க சிறுபான்மையினர் மட்டுமல்லாது பெரும்பான்மையினரையும் ஒன்றிணைக்க வேண்டும் என காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஏ.கே.அந்தோணி - காங்கிரஸ்
ஏ.கே.அந்தோணி - காங்கிரஸ்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிறுவன தின விழாவில் உரையாற்றிய ஏ.கே.அந்தோணி, ``இங்கு இஸ்லாமியர்கள் மசூதிகளுக்குச் செல்லலாம், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்குச் செல்லலாம். ஆனால், இந்து நண்பர்கள் கோயிலுக்குச் சென்றாலோ, திலகம் வைத்தாலோ அது 'சாஃப்ட் இந்துத்துவா (soft Hindutva)' என்று முத்திரை குத்தப்படுகிறது. இத்தகைய அணுகுமுறை தொடர்ந்தால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அது சாதகமாகிவிடும் . எனவே, மோடிக்கு எதிராகப் போராட சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகங்களின் ஆதரவு நமக்குத் தேவை. அதோடு, மோடிக்கு எதிராகப் போராடுவதில் இந்துக்களையும் ஒன்றுதிரட்ட வேண்டும்" எனக் கூறினார்.

அமித் மாள்வியா
அமித் மாள்வியா
twitter

ஏ.கே.அந்தோணியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க ஐடி செல் தலைவர் அமித் மால்வியா, ``காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தியர்கள் இந்தியர்கள் அல்ல, பெரும்பான்மையினர், சிறுபான்மையினர், இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். " என ட்விட்டரில் விமர்சித்திருக்கிறார்.