Published:Updated:

`ராகுல் அணிந்த டி-ஷர்ட்டின் விலை ரூ.41,000!' - விமர்சித்த பாஜக... பதிலளித்த காங்கிரஸ்

ராகுல் - டி-ஷர்ட்

``ஆடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், மோடியின் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள சூட் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் விலையுள்ள கண்ணாடி பற்றியும் பேசப்படும்." - காங்கிரஸ்

`ராகுல் அணிந்த டி-ஷர்ட்டின் விலை ரூ.41,000!' - விமர்சித்த பாஜக... பதிலளித்த காங்கிரஸ்

``ஆடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், மோடியின் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள சூட் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் விலையுள்ள கண்ணாடி பற்றியும் பேசப்படும்." - காங்கிரஸ்

Published:Updated:
ராகுல் - டி-ஷர்ட்

தொடர்ச்சியாக இரண்டு மக்களவைத் தேர்தல்களில் தோல்வியடைந்ததையடுத்து, அடுத்து 2024-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில், காங்கிரஸ் களமாடி வருகிறது. அதன் முன்னெடுப்பாக, கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கடந்த புதன்கிழமையன்று `பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை மக்களை நேரில் சந்திக்கும் விதமாக யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிலையில், யாத்திரையின்போது ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை நிற Burberry t-shirt-ன் விலை ரூபாய் 41,000 எனக் குறிப்பிட்டு, அருகில் ராகுல் காந்தியின் படத்தையும் வைத்து, `பாரத், தேகோ' என்ற தலைப்புடன் ட்விட்டரில் பா.ஜ.க விமர்சித்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க-வின் விமர்சனத்துக்கு எதிர் ட்வீட்செய்து கேள்வியெழுப்பியுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

காங்கிரஸின் அந்த ட்விட்டர் பதிவில், ``ஏன், பாரத் ஜோடோ யாத்ராவில் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து பயமா? வேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்னைகளைப் பற்றிப் பேசுங்கள். ஆடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், மோடியின் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள சூட் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் விலையுள்ள கண்ணாடி பற்றியும் பேசப்படும். என்ன செய்யவேண்டுமென்று எங்களிடம் கூறுங்கள்?" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.