Published:Updated:

``பாஜக, எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை அமைக்க விரும்புகிறது!" - காங்கிரஸ் சாடல்

காங்கிரஸ் - சசி தரூர்

``எதிர்க்கட்சியினரை நீங்கள் அசாதாரணமான முறையில் குறிவைத்திருக்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக நான் கருதுகிறேன்." - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

``பாஜக, எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை அமைக்க விரும்புகிறது!" - காங்கிரஸ் சாடல்

``எதிர்க்கட்சியினரை நீங்கள் அசாதாரணமான முறையில் குறிவைத்திருக்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக நான் கருதுகிறேன்." - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

Published:Updated:
காங்கிரஸ் - சசி தரூர்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள்மீது நடத்தப்படும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தொடர்பாக, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சித்துவருகின்றனர். நேற்றுகூட, மகாராஷ்டிரா மாநில சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இந்த நிலையில் சஞ்சய் ராவத்மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக, மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் ஊடகத்திடம் பேசிய சசி தரூர், ``அமலாக்கத்துறை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அரசு நிறுவனங்கள் யாவும், அரசியல் நோக்கங்களுக்கானவை அல்ல. அவை குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

ஆனால் எதிர்க்கட்சியினரை, நீங்கள் அசாதாரணமான முறையில் குறிவைத்திருக்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக நான் கருதுகிறேன். ஏனெனில் இந்தியா ஒரு ஜனநாயக மதிப்புமிக்க நாடு" எனக் கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

இதேபோல் சஞ்சய் ராவத்மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ``பா.ஜ.க, எதிர்க்கட்சியே இல்லாத நாடாளுமன்றத்தை அமைக்க விரும்புகிறது. அதனால்தான் சஞ்சய் ராவத்மீது இந்த நடவடிக்கை" என்று கூறியிருந்தார்.

முன்னதாக மும்பையில் நேற்று சஞ்சய் ராவத்துக்குச் சொந்தமான வீட்டில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், ரூ.11.5 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.