Published:Updated:

ராஜீவ் நினைவுநாள் அன்றே 6 பேர் விடுதலைக்காக ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர்... அப்செட்டில் காங்கிரஸ்?!

எழுவர் விடுதலை

ராஜீவ் காந்தி நினைவுநாளன்று முருகன், நளினி உள்ளிட்ட ஆறு பேரின் விடுதலை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டது காங்கிரஸுக்குக் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் நினைவுநாள் அன்றே 6 பேர் விடுதலைக்காக ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர்... அப்செட்டில் காங்கிரஸ்?!

ராஜீவ் காந்தி நினைவுநாளன்று முருகன், நளினி உள்ளிட்ட ஆறு பேரின் விடுதலை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டது காங்கிரஸுக்குக் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
எழுவர் விடுதலை

31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு பேரறிவாளன் கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அந்த அறிவிப்பை பலரும் வெடித்துக் கொண்டாட, காங்கிரஸ்காரர்களோ அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். விடுதலை அறிவிப்புக்குப் பிறகு முதல் பிரத்யேகப் பேட்டியை ஜூ.வி-க்காகக் கொடுத்திருந்தார் பேரறிவாளன். அதில் இறுதிக் கேள்வியாக, மற்ற ஆறுபேரின் விடுதலை குறித்துக் கேட்கப்பட, “அவர்கள் ஆறு பேருக்கும் விடுதலையாகக்கூடிய அனைத்து உரிமைகளும், தகுதியும் இருக்கின்றன. கட்டாயம் அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். நானும் நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்று பதிலளித்திருந்தார் பேரறிவாளன். அதன்படி, முருகன், நளினி, சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஆறுபேரின் விடுதலைக்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டுவிட்டன என்பதை சமீபத்திய அரசின் செயல்பாடுகள் காண்பிக்கின்றன.

முருகன், நளினி, சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்
முருகன், நளினி, சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்

மே 21, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட, 31-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. டெல்லியிலுள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருக்கும் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காங்கிரஸார் கொஞ்சம்கூட எதிர்பாராதவிதமாக, அதே தினம் முதல்வர் ஸ்டாலின், மீதமிருக்கும் ஆறு பேரின் விடுதலை குறித்து அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இச்செயல் அப்போதே காங்கிரஸார் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியது.

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் நிர்வாகிகள்
ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் நிர்வாகிகள்

இதுபற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “முதல்வரின் செயல்பாடு ரொம்பவும் அபத்தமாக உள்ளது. எல்லாமே ஏதோ செட் செய்யப்பட்டதுபோல நடக்கின்றன. சரியாக மே 18-ம் தேதி, அதாவது ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட நாளாக சித்திரிக்கப்படும் தினத்தில் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. அதுதான் யதேச்சையாக நடந்ததாக நினைத்தால்,

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அடுத்த நிகழ்வு சரியாக ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மே 21-ம் தேதி முதல்வர் மீதி ஆறு பேரை விடுதலை செய்வதற்கான ஆலோசனையில் ஈடுப்பட்டிருக்கிறார். இது ஒன்றும் தெரியாமல், யதார்த்தமாக நடந்த கூட்டமில்லை. திட்டமிட்டு, காங்கிரஸ்காரர்களை மேலும் வெறுப்பேற்றவே முதல்வர் அந்த தினத்தைத் தேர்வுசெய்திருக்கிறார் என்று நினைக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எவ்வளவு அடித்தாலும், என்ன ஆனாலும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியைவிட்டு விலகாது; ஒரு ராஜ்ய சபா சீட்டைக் கொடுத்துவிட்டோம். அதனால் அமைதியாகிவிடுவார்கள் என்ற எண்ணம்தான் தி.மு.க-வுக்கு மேலோங்கியிருப்பதாகக் கருதுகிறோம். பேரறிவாளன் விடுதலையின்போதே உச்ச நீதிமன்றம், இவரொன்றும் குற்றமற்றவர், நிரபராதி என்று எங்குமே குறிப்பிடவில்லை. ராஜீவ் காந்தி படுகொலையின்போது, குண்டுவெடிப்பால் மாற்றுத்திறனாளியாகிப்போன முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா சொன்னதுபோல, ‘பேரறிவாளன் ஒரு கொலைகாரர்’ என்பதில் நாங்களும் உறுதியாகவே இருக்கிறோம். அதேபோல், மீதமிருக்கும் ஆறு பேரும்கூட கொலைக் குற்றவாளிகள்தான் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

கே.எஸ்.அழகிரி - பேரறிவாளன்
கே.எஸ்.அழகிரி - பேரறிவாளன்

ஒரு விவகாரம் மூலம் அவருக்கு விமோசனம் கிடைத்துவிட்டால், அதே பாணியைப் பின்பற்றி மற்றவர்களும் அதே விமோசனத்தை எதிர்பார்ப்பது இயல்புதான். அது மாதிரி இந்த விஷயத்தில் நடக்கவே கூடாது. 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால்தான் உச்ச நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. அதுவும், பேரறிவாளன் தொடர்ச்சியாக சட்டப் போராட்டத்தில் இருந்ததால் இது சாத்தியமானது. மற்ற ஆறு பேரும் இவர் அளவுக்கு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அதனால், வான்ட்டடாக தமிழ்நாடு அரசே அதற்கான முயற்சியில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது” என்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் செல்வத்திடம் பேசினோம். “மே 21-ம் தேதியன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது தற்செயலாக நடந்ததல்ல, திட்டமிட்ட ஒன்றுதான். காங்கிரஸ் தெளிவாகச் சொல்லியிருப்பது ஒரே விஷயம்தான். எந்த மதம், இனமாக இருந்தாலும் குற்றவாளிகள் குற்றவாளிகள்தான். இனத்தால், மதத்தால் பாகுபடுத்தக் கூடாது. ஏற்கெனவே சி.பி.ஐ பலகட்ட விசாரணை நடத்தியிருக்கிறது, உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்திருக்கிறது. தூக்குத் தண்டனைப் பெற்றவர்களின் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்திருப்பதுதான் கருணை. அதற்கு மேலும் விடுதலை செய்ய வேண்டும் என்றால், இந்திய சிறைகளில் இருக்கும் ஏதோ காரணங்களுக்காகக் குற்றமிழைத்த குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்துவிட முடியுமா?

குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட, ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்ட, காயம்பட்டவர்களும் தமிழர்கள்தான். அன்றைய மீட்டிங்கில் பங்கேற்றதைத் தவிர, அவர்கள் என்ன குற்றம் செய்தனர்... அவர்களை ஏன் ஒருவரும் நினைத்துப் பார்ப்பதில்லை... துன்பம் என்பது இவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு உள்ளது. பேரறிவாளன் விடுதலையால், சி.பி.ஐ-யின் வழக்கு விசாணையில் தவறு இருக்கிறதா... நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது தவறா... என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது.

செல்வம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
செல்வம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

கொலைச் சம்பவம் நடந்த அன்று குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிக்கக்கூட ஒருவருமில்லை. ஆனால், இன்று குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுக்க புற்றீசல்கள்போல கிளம்பிவருகிறார்கள். அத்தகையவர்களின் பின்னணி, நோக்கம் என்ன... ஒருசில அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஓர் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

சட்டத்தை மதிக்காத, ஜனநாயகத்தை மதிக்காத, உயிரைக் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டு சதிவேலை செய்து குற்றமிழைத்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், அதற்கு ஒரு சார்பினர் ஆதரவு கொடுத்தால், அதே குற்றத்தை அவர்கள் குடும்பத்துக்கு யாராவது செய்திருந்தால் சும்மா விட்டிருப்பார்களா... ‘பரவாயில்லை அவன் தமிழன்தான் தெரியாமல் தப்பு செய்துவிட்டான். தண்டனையிலிருந்து மன்னிப்புக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்வார்களா... அதனால், சட்டத்திலிருக்கும் ஓட்டையைப் பயன்படுத்தி யாரையும் தப்பிக்க விடக் கூடாது என்பதே எங்கள் கருத்து!” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism