Published:Updated:

``சிபிஐ போன்றவற்றை மோடி தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்!" - உத்தம்குமார் ரெட்டி குற்றச்சாட்டு

உத்தம்குமார் ரெட்டி

"பல ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ., வருவாய் புலனாய்வு இயக்குநரகம் போன்ற ஏஜென்சிகளை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்" என தெலங்கானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் உத்தம்குமார் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

``சிபிஐ போன்றவற்றை மோடி தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்!" - உத்தம்குமார் ரெட்டி குற்றச்சாட்டு

"பல ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ., வருவாய் புலனாய்வு இயக்குநரகம் போன்ற ஏஜென்சிகளை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்" என தெலங்கானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் உத்தம்குமார் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

உத்தம்குமார் ரெட்டி

சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் சத்தியமூர்த்தி பவனில் தெலங்கானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் உத்தம்குமார் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பல ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ., வருவாய் புலனாய்வு இயக்குநரகம் போன்ற ஏஜென்சிகளைத் தவறாகப் பயன்படுத்தி, தனது அரசியல் அல்லது கருத்தியல் எதிரிகளை மிரட்டவும், தனது நிதி நலன்களுக்கு இணங்காத வணிக நிறுவனங்களைத் தண்டிக்கவும் பிரதமர் மோடி பயன்படுத்தியிருக்கிறார்.

உத்தம்குமார் ரெட்டி
உத்தம்குமார் ரெட்டி

1992-ம் ஆண்டில், ஹர்ஷத் மேத்தா வழக்கை விசாரிக்க ஒரு நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டில் கேதன் பரேக் வழக்கை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரித்தது. அன்றைய பிரதமர்கள் நரசிம்மராவ், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய இருவரும், கோடிக்கணக்கான இந்திய முதலீட்டாளர்களை பாதித்த ஊழல்களை விசாரிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்மீது நம்பிக்கைகொண்டிருந்தனர். பிரதமர் மோடிக்கு என்ன பயம்... அவருக்குக் கீழ் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கை இல்லையா...

இந்த மோசடி நடந்துகொண்டிருக்கும்போது செபி என்ன செய்து கொண்டிருந்தது... இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவு, செயற்கையாக உயர்த்தப்பட்ட விலைகளால் ஏமாற்றப்பட்டு, அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்த லட்சக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்கள் நிதிரீதியாக பாதிப்பைச் சந்தித்திருக்கின்றனர். ஜனவரி 24 முதல் பிப்ரவரி 15 வரை அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு ரூ.10,50,000 கோடியாகச் சரிந்தது. கடந்த 2021, ஜூலை 19-ல் செபியின் விதிமுறைகளை மீறியதற்காக அதானி குழுமம் விசாரணையில் இருப்பதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

அதானி - மோடி
அதானி - மோடி

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 2020, டிசம்பர் 30-ல் ரூ.83,000 கோடியிலிருந்து ரூ.39,000 கோடியாகக் குறைந்தது. பங்குகளின் விலை வீழ்ச்சி மற்றும் குழுமத்தின்மீதான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், கடந்த ஜனவரி 30-ல் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்யும்படி எல்.ஐ.சி-யை மோடி அரசாங்கம் நிர்பந்தித்தது. கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய பிரதமர் மோடிக்குப் பிடித்த அதானி வணிகக் குழுமம், வெளிநாட்டு போலி நிறுவனங்களின் மூலம் பங்கு விலைகளைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் பங்குகளில் 4.5 பில்லியன் டாலர் (ரூ.37,000 கோடி) மான்டெரோசா குழுமத்திடம் இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத், அதானியின் மகளைத் திருமணம் செய்துகொண்டவர். தப்பியோடிய வைர வியாபாரிக்கும் இதில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. விமான நிலையங்களைக் கையாளுவதில் அனுபவமே இல்லாத அதானி குழுமத்துக்கு, கடந்த 2019-ம் ஆண்டில், அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், குவாஹத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களைக் கையாளும் உரிமம் வழங்கப்பட்டது. அதானி குழுமம் இன்று 13 துறைமுகங்கள் மற்றும் முனையங்களைக் கையாளுகிறது.

குஜராத்திலுள்ள முந்த்ரா துறைமுகத்துடன் கூடுதலாக, தாம்ரா துறைமுகம், ஒடிசா (2015); காட்டுப்பள்ளி துறைமுகம், தமிழ்நாடு (2018); கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகம், ஆந்திரப் பிரதேசம் (2020); கங்காவரம் துறைமுகம், ஆந்திரப் பிரதேசம் (2020) ஆகியவை அடங்கும். வெளிநாட்டு போலி நிறுவனங்களால் பண மோசடி செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒரு நிறுவனத்தை, தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது தேசியப் பாதுகாப்புக்கு நல்லதா... என்ற கேள்வி எழுகிறது.

எல்ஐசி
எல்ஐசி
LIC

பிரதமர் மோடியுடன் பல வெளிநாட்டுப் பயணங்களில் கௌதம் அதானி சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 4-6 2017-ல் அவர் இஸ்ரேலுக்குச் சென்ற பிறகு, முன் அனுபவம் இல்லாத போதிலும், டிரோன்கள், எலெக்ட்ரானிக்ஸ், சிறிய ஆயுதங்கள் மற்றும் விமானப் பராமரிப்பு ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளுடன் இந்தியா-இஸ்ரேல் பாதுகாப்பு உறவில் அவருக்கு லாபகரமான பங்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி 2018-ல், வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக கோடா மின் நிலையத்தைச் சிறப்புப் பொருளாதார மண்டலமாக அமைக்க அதானி பவர் விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், வர்த்தக அமைச்சகம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. இருந்தும் 9 ஜனவரி, 2019-ல் வர்த்தக அமைச்சகம் தனது பார்வையை மாற்றி, அந்த வழிகாட்டுதல்களைத் திருத்தியது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சிறிது காலத்துக்குப் பிறகு, 25 பிப்ரவரி, 2019 அன்று, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான ஒப்புதல் வாரியம் அதானி பவரின் விண்ணப்பத்தை அங்கீகரித்தது. இந்தக் கொள்கை மாற்றத்தால், நிலக்கரி இறக்குமதி வரிகள் நீக்கப்பட்டதன் மூலம் அதானி பவர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி லாபம் கிடைத்தது. மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014-ம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-வது இடத்திலிருந்த கௌதம் அதானி 2022-ல் இரண்டாவது இடத்துக்கு வந்த அதிசயத்தை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய அசுர வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவுதான் காரணம் என்பதை எவராவது மறுக்க முடியுமா... மோடி அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளாக சி.ஏ.ஜி., சி.பி.ஐ போன்ற அனைத்து அரசு நிறுவனங்களின் கைகளையும் கட்டிப்போட்டிருக்கலாம். ஆனால், உண்மை வெளிப்பட்டே தீரும் என்பதையே அதானியின் வீழ்ச்சி வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இதை அமலாக்கத்துறையோ, சி.பி.ஐ அமைப்போ முயன்றாலும் மறைக்க முடியாது. இது ஆரம்பம்தான்... பா.ஜ.க-வின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறப்போவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.