Published:Updated:

எம்.எல்.ஏ Vs அமைச்சர்... ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் தீவிரமடையும் உட்கட்சிப்பூசல்!

ராஜஸ்தான் - எம்.எல்.ஏ Vs அமைச்சர்

``சங்கோட் எம்.எல்.ஏ பாரத் சிங், முந்தைய அரசின் தீய நட்பு வட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்." - காங்கிரஸ் அமைச்சர்

எம்.எல்.ஏ Vs அமைச்சர்... ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் தீவிரமடையும் உட்கட்சிப்பூசல்!

``சங்கோட் எம்.எல்.ஏ பாரத் சிங், முந்தைய அரசின் தீய நட்பு வட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்." - காங்கிரஸ் அமைச்சர்

Published:Updated:
ராஜஸ்தான் - எம்.எல்.ஏ Vs அமைச்சர்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. சங்கோட் தொகுதியைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பாரத் சிங், அமைச்சர் பிரமோத் பயாமீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவந்தார். தற்போது, அதன் உச்சமாக அமைச்சர் பிரமோத் பயா பதவி விலக வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதன் காரணமாக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியிருக்கிறது.

மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பாரத் சிங்
மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பாரத் சிங்
ட்விட்டர்

காங்கிரஸ் எம்.எல்.ஏ பாரத் சிங் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ``பாரன் தொகுதியில் காடுகள், ஆறுகள் மற்றும் வடிகால்களில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டி சட்டவிரோத அமைச்சராக பிரமோத் பயா சாதனை படைத்திருக்கிறார். மேலும், சுரங்கப் பணியின்போது பலர் இறந்ததாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்குக் கீழே ஊழல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, அமைச்சர் பிரமோத் பாயாவை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரமோத் பயா
பிரமோத் பயா
ட்விட்டர்

காங்கிரஸ் எம்.எல்.ஏ பாரத் சிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் பிரமோத் பயா, ``எனக்கெதிராகக் கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. சட்டவிரோத சுரங்கத்துக்கு எதிராக, என்னுடைய பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள்போல இதற்கு முந்தைய அரசால் செய்யப்படவில்லை. ஒருவேளை சங்கோட் எம்.எல்.ஏ பாரத் சிங், முந்தைய அரசின் தீய நட்பு வட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.