Published:Updated:

`ஆளுங்கட்சி குறித்து கேள்வி எழுப்பும் குரலை அடக்கும் முயற்சியா?’ - காங்கிரஸ் எழுப்பும் கேள்விகள்

பா.ஜ.க - காங்கிரஸ்

``ராகுல் காந்திக்கு அழுத்தம் கொடுக்க 40-50 அமைச்சர்களை வைத்து பா.ஜ.க அரசு ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவு செய்கிறது ஏன்?” - ரன்தீப் சுர்ஜேவாலா

`ஆளுங்கட்சி குறித்து கேள்வி எழுப்பும் குரலை அடக்கும் முயற்சியா?’ - காங்கிரஸ் எழுப்பும் கேள்விகள்

``ராகுல் காந்திக்கு அழுத்தம் கொடுக்க 40-50 அமைச்சர்களை வைத்து பா.ஜ.க அரசு ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவு செய்கிறது ஏன்?” - ரன்தீப் சுர்ஜேவாலா

Published:Updated:
பா.ஜ.க - காங்கிரஸ்

நேஷ்னல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, நேற்று ராகுல் காந்தி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அதைத் தொடர்ந்து அவரிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது. இந்த நிலையில் இன்றும் ராகுல் காந்தி விசாரணைக்கு வர வேண்டும் எனக் கூறியதால் இன்றும் அவர் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார்.

இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் சார்பில் பல இடங்களில் அமைதிப் போராட்டம் என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மத்திய அரசை நோக்கிய சில கேள்விகளை முன்வைத்திருக்கிறது.

ரன்தீப் சுர்ஜேவாலா
ரன்தீப் சுர்ஜேவாலா

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம், கர்நாடகாவில் பா.ஜ.க தலைவர்களான ஹிமந்தா பிஸ்வா சர்மா, பி.எஸ்.எடியூரப்பா ஆகியோர் பா.ஜ.க-வில் இணைந்தபோது, அவர்கள் மீது போடப்பட்ட அமலாக்கப் பிரிவின் வழக்குகளில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையே ஏன்... அமலாக்கப் பிரிவு மோடி அரசின் தேர்தல் மேலாண்மைத்துறையாக மாறிவிட்டதா?

காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் மட்டும் பா.ஜ.க குறிவைக்கிறதே ஏன்... மக்களிடம் ஆளுங்கட்சி குறித்து கேள்வி எழுப்பும் குரலை அடக்கும் முயற்சியா?

முதலாளிகளுக்கு லாபம் கிடைக்க ராகுல் காந்தி தடையாகிவிட்டாரா?

ராகுல் காந்திக்கு அழுத்தம் கொடுக்க 40-50 அமைச்சர்களை வைத்து பா.ஜ.க அரசு ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவு செய்கிறது ஏன்?

மோடி அரசு தனது ஆட்சியின் தோல்வி பீதியில் அமலாக்கப் பிரிவு உடையணிந்து ஒருமைப்பாட்டின் குரலை அடித்திருக்கிறது. இது அமலாக்கப் பிரிவின் மீதான, மக்களின் பிரச்னைகளை எழுப்பும் குரல் மீதான தாக்குதல்" எனக் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism