நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், `ஆற்று மணல் தேவை அதிகரித்திருப்பதால், பொதுமக்கள், பில்டர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு யூனிட் மணலின் விலை 1000 ரூபாய்’ என்று சொல்லியிருந்தார். இதற்காக ஏற்கெனவே உருவாக்கப்பட்ட www.tnsand.com என்ற இணையதளம் வாயிலாக மக்கள் விண்ணப்பிக்கலாம்.

இது எந்தளவுக்குச் சாத்தியம் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜிடம் பேசினோம். ``இதைத்தான் நாங்கள் பல காலமாகச் சொல்லிவருகிறோம். கடந்த அ.தி.மு.க அரசு இதனைத் தொடங்கி, அப்படியே விட்டுவிட்டது. கடந்த முறை முதல்வர் எடப்பாடியே பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்ததால், யாராலும் அவரிடம் நெருங்கிப் பேசமுடியவில்லை. 2003-லேயே அரசு மணல் குவாரிகளை எடுத்து நடத்த முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இடையில் 3-வது நபராக மீடியேட்டர் உள்ளே வந்து, அதுவே தொடர்கதையாகிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசுங்கச்சாவடிகளில் நேரடி பண வசூலுக்குப் பதிலாக ஃபாஸ்டேகை அறிமுகப்படுத்தினர். அதன்மூலம், தொகை முழுவதும் அரசாங்கத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல்தான், ஆன்லைன் மூலம் ஆற்று மணல் விற்பனை செய்தால், இடைத்தரகர்கள் இன்றி மொத்த பணமும் அரசு கஜானாவுக்குச் செல்லும். இதன்மூலம், வருடத்துக்கு 10,000 கோடி ரூபாய் வருவாய் அரசுக்குக் கிடைக்கும்.

சிமென்ட் மூட்டைப்போல வெறும் 25 கிலோ மூட்டையாக மணலைக் கொடுத்தால் பொதுமக்களே நேரடியாகச் சென்றுப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், அரசு கொடுப்பதோ யூனிட் கணக்கில். ஒரு யூனிட் என்பது 4.5 டன் எடைகொண்டது. அதனைக் கண்டிப்பாக லாரியில்தான் ஏற்றிச்செல்ல முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பொதுமக்களுக்கு ஆற்று மணல் தேவை ஏற்பட்டால், முதலில் லாரி உரிமையாளர்களான எங்களைத்தான் அனுக வேண்டும். எங்கிருந்து மணலை ஏற்ற வேண்டும், எங்கு சென்று சேர்க்க வேண்டும் என்பதைக் கேட்டு, அதற்கான போக்குவரத்துச் செலவை நாங்கள் குறிப்பிடுவோம். ஒப்புக்கொண்டால் எந்த லாரி என்பதற்கான அடையாளமாக லாரி பதிவு எண்ணை நாங்கள் கொடுக்க வேண்டும். இணையதளத்தில் மக்கள் விண்ணப்பிக்கும்போது, லாரி பதிவு எண்ணுடன் சேர்த்துதான் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 6,000 ரூபாயிலிருந்து, அதிபட்சமாக 40,000 ரூபாய் வரை தொலைவுக்கு ஏற்ப லாரி வாடகை நிர்ணயிக்கப்படும்.

இதில் என்ன கேள்வி எழுகிறது என்றால்? எந்தக் குவாரிகளில் இருந்து அரசு ஆற்று மணலைக் கொடுக்கப்போகிறது? குவாரிகளை நிர்வகிப்பது யார்? மணலை அள்ளி, அதை லாரிகளில் ஏற்றுவது யார்? என்பது குறித்த விளக்கம் கொடுக்கப்படவில்லை. ஏனெனில், குவாரிகளில் மணலை எந்திரங்கள் கொண்டு அள்ளி, அதை லாரிகளில் ஏற்றுவதற்கு 3-வது நபருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு ஆற்று மணல் விவகாரம் குறித்து விளக்கமாக மக்களுக்குத் தெரியப்படுத்திட வேண்டும்.

எங்களுக்கு சில கோரிக்கைகளும் உண்டு. ஒவ்வொரு லாரிகளுக்கும் ஜி.பி.எஸ் கருவிகளைப் பொருத்திட வேண்டும். அப்போதுதான் லாரி எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்ற தகவல் தெரியும். 20,000-க்கும் மேற்பட்ட அகில இந்திய பெர்மிட் லாரிகள் தமிழக அரசின் புக்கிங்கில் உள்ளன. அதனை மொத்தமாக நீக்கிட வேண்டும். ஏனென்றால், தமிழக ஆற்று மணலை கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்கள் அதிகம் விரும்பிக் கேட்பதால், அதுபோன்ற அகில இந்திய பெர்மிட் லாரிகள் திருட்டுத்தனமாக மணலைக் கடத்திக்கொண்டு செல்கின்றன.

தண்ணீர் லாரி, சரக்கு லாரி, மணல் லாரி என எல்லா வகையான லாரிகளுக்கும் ஒரே வண்ணம் பூசப்பட்டிருப்பதால், மணல் கடத்தலைக் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. அதனால், எளிதில் அடையாளம் காணும் வகையில் மணல் லாரிகளுக்கு என தனி வண்ணத்தைத் தேர்வு செய்திட வேண்டும். ஆற்று மணல் குவாரிகளில், மணலை ஜே.சி.பி உள்ளிட்ட எந்திரங்களைக் கொண்டு அள்ள அனுமதிக்கக் கூடாது. எந்திரங்கள் மூலம் அள்ளினால் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து அள்ளிச்செல்கிறார்கள். அந்தந்தப் பகுதியில் இருக்கும் மக்களைக் கொண்டு அள்ளி, ட்ராக்ட்டர்கள் மூலம் லாரிகளில் ஏற்றிட வேண்டும்.

டாஸ்மாக் போல மணல் விநியோகத்தையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்து, தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்திட வேண்டும். தற்காலிக ஊழியர்களை நியமித்தால், அவர்கள் மணல் கொள்ளையர்களுக்குத் துணை போகிறார்கள். அதனால், 2000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை மணல் விநியோகனைப் பிரிவில் நியமித்திட வேண்டும். இவ்வாறெல்லாம் அரசு செய்தால், ஆன்லைன் மணல் விற்பனை நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை!” என்று முடித்தார்.

பெயர் சொல்ல விரும்பாத கனிமவள அதிகாரி ஒருவர் இது குறித்து நம்மிடம் கூறுகையில்,``என்னதான் கனிமவளத்துறை துரைமுருகன் வசமிருந்தாலும், அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் கம்யூனிகேஷனே இல்லை. அமைச்சர் சொல்வதைக் கேட்காத அதிகாரிகள், நேரடியாக முதல்வர் அலுவலகத்தில் பேசிக்கொள்கிறார்கள். எனினும், ஆற்று மணல் விவகாரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் துரைமுருகன். ஆனால், முதல்வர் ஸ்டாலின், அதையும் துரைமுருகன் வாயாலேயே அறிவிக்க வைத்துவிட்டார்.

மணல் குவாரிகளை அரசு நடத்தினாலும், லாரிகள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து பொதுமக்களே நேரடியாகப் பெற்றுக்கொண்டாலும், ஆற்று மணலைக் குவாரியிலிருந்து அள்ளி, அதனை லாரிகளில் ஏற்ற ஆள்கள் வேண்டும். லோக்களில் உள்ள பொதுமக்களைப் பயன்படுத்தலாம் என்று சிலர் யோசனைக் கூறுகின்றனர்.

ஆனால், அரசு இடைத்தரகர்களை முழுமையாக ஒழித்துக் கட்டினால் மட்டுமே மணல் விவகாரத்தில் மக்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.