Published:Updated:

``என்னைப் பொய் வழக்கில் சிக்கவைக்கப் பிரதமர் அலுவலகம் சதி!" - ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

ஜிக்னேஷ் மேவானி ( ட்விட்டர் )

``இந்த ஆண்டு இறுதியில் மாநிலத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக எனது புகழை கெடுக்கும் சதி நடைபெற்று வருகிறது.'' - ஜிக்னேஷ் மேவானி

``என்னைப் பொய் வழக்கில் சிக்கவைக்கப் பிரதமர் அலுவலகம் சதி!" - ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

``இந்த ஆண்டு இறுதியில் மாநிலத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக எனது புகழை கெடுக்கும் சதி நடைபெற்று வருகிறது.'' - ஜிக்னேஷ் மேவானி

Published:Updated:
ஜிக்னேஷ் மேவானி ( ட்விட்டர் )

பிரதமர் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாக குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் அருப் குமார் டே என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சுயேச்சை எம்.எல்.ஏ மேவானி, குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் வைத்து ஏப்ரல் 20-ம் தேதி அஸ்ஸாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், ஏப்ரல் 25-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒரு பெண் காவலரை தாக்க முயன்றதாக மீண்டும் ஒரு வழக்கில் மேவானி கைது செய்யப்பட்டார். அஸ்ஸாமில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் இறுதியாக சனிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி
குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி
twitter

இந்த நிலையில், தான் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஜிக்னேஷ் மேவானி, ``எனக்கு ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றம் முன்வைத்த கடுமையான கருத்துகளுக்கு அஸ்ஸாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசு வெட்கப்பட வேண்டும். என்மேல் ஏப்ரல் 19-ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. என்னைக் கைது செய்ய ஒரே நாளில் 2,500 கிலோமீட்டர்களுக்கு மேல் போலீஸார் பயணம் செய்தனர். பிரதமர் அலுவலகத்தில் என்னை அழிக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதிதான் இது.

இந்த ஆண்டு இறுதியில் மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக என்னுடைய பெயரைக் கெடுக்கும் சதி நடைபெற்று வருகிறது. இதை நான் 56 இன்ச் கோழைத்தனம் என்று சொல்கிறேன். ஒரு பெண்ணைப் பயன்படுத்தி என்னைப் பொய் வழக்கில் சிக்க வைக்க... பிரதமர் அலுவலகம் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism