Published:Updated:

ஜம்மு காஷ்மீரில் தொடரும் படுகொலைகள்: பண்டிட்டுகளின் பீதிக்குப் பின்னால் இருப்பது என்ன?

ஜம்மு - காஷ்மீர்

" `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்ததுடன், வன்முறையையும் தூண்டிவிட்டிருக்கிறது" - மெகபூபா முஃப்தி

ஜம்மு காஷ்மீரில் தொடரும் படுகொலைகள்: பண்டிட்டுகளின் பீதிக்குப் பின்னால் இருப்பது என்ன?

" `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்ததுடன், வன்முறையையும் தூண்டிவிட்டிருக்கிறது" - மெகபூபா முஃப்தி

Published:Updated:
ஜம்மு - காஷ்மீர்

``ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலிலிருந்தாலும் காஷ்மீர் இந்துக்கள் நாள்தோறும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆகையால் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருவதற்குத் தேவை இருக்கிறது. கொஞ்சக் காலமாகவே, கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதால் அமித் ஷாவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பா.ஜ.க எம்.பி, சுப்ரமணியன் சுவாமி.

காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரைக் குறிவைத்துக் கடந்த சில நாள்களாகத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீப நாள்களில் பண்டிட் சமூகத்தினர் தவிர, பொதுமக்கள், போலீஸாரையும் குறிவைத்து சுட்டுக் கொன்று வருகின்றனர். கடந்த 25-ம் தேதி, ஒரு டி.வி. நடிகை அவரின் வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சமீபத்தில் ஜம்முவின் சம்பா மாவட்ட பகுதியில் வசித்து வந்த ஆசிரியை ரஜ்னி பாலா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் கடந்த மே மாதத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீஸார், 4 பேர் பொதுமக்கள். இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் படுகொலைக்கு, காஷ்மீர் சுதந்திர போராளிகள் குழு பொறுப்பேற்று வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘காஷ்மீரின் வரைபட மாற்றத்தில் ஈடுபடும் எவருக்கும் இதுபோன்ற நிலைமையே ஏற்படும். இங்கு வசிக்கும் உள்ளூர் வாசிகள் அல்லாத அனைவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

1990-களில் காஷ்மீர் பண்டிட்டுகள் பெருமளவில் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இருப்பினும், 2008-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவதற்கு உதவ ஒரு திட்டத்தை உருவாக்கினார். புலம்பெயர்ந்தோருக்கு 6,000 வேலைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சுமார் 3,800 புலம்பெயர்ந்தோர் காஷ்மீரில் பல்வேறு துறைகளில் வேலை செய்து வந்தனர். டிசம்பர் 2020-ல், தங்க நகை வியாபாரி ஒருவர் காஷ்மீர் குடியுரிமைச் சான்றிதழைப் பெற்ற சில நாள்களுக்குப் பிறகு, ஸ்ரீநகரில் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, நடந்து வரும் தாக்குதல்களில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு 2019, ஆகஸ்ட்டில் ரத்து செய்த பின்னர், இந்த தாக்குதல் தீவிரமடைந்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து காஷ்மீர் பண்டிட் ஊழியர் ஒருவர், "இங்கு நிலைமை சீரடைந்துள்ளது என்ற வாக்குறுதியின் பேரில் காஷ்மீர் திரும்பினோம். இருப்பினும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காஷ்மீரி பண்டிட்டுகள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர்" என்கிறார். இதனையடுத்து காஷ்மீர் பண்டிட் ஊழியர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் , பணியிடங்களை மாற்றுவதற்கும் முயற்சிகளை ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் ராகுல் பட் என்பவர், மே 12 அன்று அவரது அலுவலகத்திற்குள் வைத்துக் கொல்லப்பட்டதிலிருந்து, காஷ்மீர் பண்டிட்கள் தினசரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில், 4,000க்கும் மேற்பட்ட பண்டிட் சமூகத்தினர் அரசு ஊழியர்களாக உள்ளனர். இவர்கள், தங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றால், இங்கிருந்து வெளியேறுவோம் என அறிவித்துள்ளனர். மேலும் ஜம்முவின் பல நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பண்டிட்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அங்குப் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பண்டிட்டுகள் 18 நாள்களாக தர்ணாவில் ஈடுபட்டு வரும் நிலையில், பா.ஜ.க தங்கள் ஆட்சியின் 8-வது ஆண்டை கொண்டாடுவதில் மும்முரம் காட்டுகிறது. பிரதமர் அவர்களே இது படம் அல்ல, காஷ்மீரின் இன்றைய யதார்த்தம்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்
The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்

90-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகளின் கதையை மையமாக வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகளும் எழுந்தன. இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் இப்படத்தைப் பாராட்டி ப்ரொமோட் செய்து வந்தனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஷ்மீரில் பண்டிட்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, ``காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை நாங்கள் உருவாக்கினோம். 2016-ல் உச்சக்கட்ட கலவரத்தின் போது ​​கூட எந்த கொலையும் நடக்கவில்லை. ஆனால் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்ததுடன், வன்முறையையும் தூண்டிவிட்டிருக்கிறது. தற்போது நடக்கும் வன்முறைகளுக்கும் அந்த திரைப்படத்தைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும்" என்று சமீபத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி தெரிவித்திருந்தார்.

மெகபூபா முஃப்தி
மெகபூபா முஃப்தி

நிலைமை இவ்வாறு இருக்க, அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்தும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டார். காஷ்மீரில் பண்டிட்டுகள், வெளிமாநில தொழிலாளர்களை பாதுகாக்கவும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கவும், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism