Published:Updated:

ஒப்பந்ததாரர் வீட்டில் முடிவுக்கு வந்த ரெய்டு; ஆவணங்களைப் பெட்டிகளில் எடுத்துச் சென்ற ஐ.டி அதிகாரிகள்

செய்யாத்துரை வீடு

எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் உரிமையாளர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் இரண்டு நாள்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகளை நான்கு பெட்டிகளில் எடுத்துச் சென்றனர்.

ஒப்பந்ததாரர் வீட்டில் முடிவுக்கு வந்த ரெய்டு; ஆவணங்களைப் பெட்டிகளில் எடுத்துச் சென்ற ஐ.டி அதிகாரிகள்

எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் உரிமையாளர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் இரண்டு நாள்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகளை நான்கு பெட்டிகளில் எடுத்துச் சென்றனர்.

Published:Updated:
செய்யாத்துரை வீடு

நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது.

அருப்புக்கோட்டை ராகவேந்திரா நகரில் எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் உரிமையாளர் செய்யாத்துரை, அவரின் மகன்களின் வீடுகள் இருக்கின்றன. வரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக கடந்த இரண்டு தினங்களாக செய்யாத்துரை, அவரின் மகன்களுக்குச் சொந்தமான ஐந்து இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 6-ம் தேதி காலை 8:30 மணிக்கு ஏழு கார்களில் மதுரை, திருச்சி, திருநெல்வேலியிலிருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.

அதிகாரிகள்‌ வந்த கார்
அதிகாரிகள்‌ வந்த கார்

முதல் நாள் சோதனையில், எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் மற்றும் செய்யாதுரைக்குச் சொந்தமான வீடுகளிலிருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, செய்யாத்துரை, அவரின் மகன்கள் கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன், பாலசுப்பிரமணி ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள்‌ தனித் தனிக்குழுக்காளாக விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், வங்கிக் கணக்கு வரவு செலவுகள், முக்கிய ஆவணங்கள், நிலுவையிலுள்ள பணம், செட்டில்மென்ட் தொகை, டெண்டர் விவரங்கள் குறித்து வருமான வரித்துறையினர் கேள்விகள் எழுப்பியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. இதைத் தொடர்ந்து, விசாரணையை முடித்துக்கொண்டு, செய்யாத்துரை வீடு, எஸ்‌.பி.கே.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள், ஆவணங்களை நான்கு பெட்டிகளில் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதுதவிர லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.