Published:Updated:

``நம்முடைய பிரதமர் மோடி, நேருவுக்கு நேர் எதிரானவர்..!" - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

சசி தரூர் - மோடி

``இந்திய நாடாளுமன்றத்தைவிடவும் வெளிநாட்டு நாடாளுமன்றங்களில்தான் அதிகப்படியான சொற்பொழிவுகளை மோடி நிகழ்த்தியிருக்கிறார்." - சசி தரூர்

``நம்முடைய பிரதமர் மோடி, நேருவுக்கு நேர் எதிரானவர்..!" - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

``இந்திய நாடாளுமன்றத்தைவிடவும் வெளிநாட்டு நாடாளுமன்றங்களில்தான் அதிகப்படியான சொற்பொழிவுகளை மோடி நிகழ்த்தியிருக்கிறார்." - சசி தரூர்

Published:Updated:
சசி தரூர் - மோடி

எம்.பி-யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் இந்தியா-சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை, மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் ஒப்பிட்டு விமர்சித்திருக்கிறார்.

மோடி - நேரு
மோடி - நேரு

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியொன்றில், ஜனநாயகம், ஜனநாயக அமைப்புகள் மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பாக மோடி-நேருவை ஒப்பிட்டுப் பேசிய சசி தரூர், ``நம்முடைய பிரதமர் மோடி, நேருவுக்கு அப்படியே நேர் எதிரானவர். இந்திய நாடாளுமன்றத்தைவிடவும் வெளிநாட்டு நாடாளுமன்றங்களில்தான் அதிகப்படியான சொற்பொழிவுகளை மோடி நிகழ்த்தியிருக்கிறார்.

சசி தரூர்
சசி தரூர்

1962-ல் இந்தியா, சீனாவுடன் போரில் ஈடுபட்டபோது, ​​அப்போதைய பிரதமர் நேரு, நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். ஆனால் இன்று சீனாவில், அதிலும் குறிப்பாக, கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடக்கிறது என்பது குறித்து, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பகூட அனுமதிக்கப்படுவதில்லை. இருபது இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த போதிலும், இந்தியா-சீனா இடையேயான பிரச்னைகள் குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எந்த விவாதமும் இல்லை" என மோடியையும், பா.ஜ.க அரசையும் விமர்சித்தார்.