Published:Updated:

மாமல்லபுரம்: சிற்பக்கலை தூண் சர்ச்சையும்... அமைச்சரின் விளக்கமும்!

மாமல்லபுரம் சிற்பக்கலை தூண்

பூம்புகார்-தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 45 அடி உயரம் கொண்ட சிற்பக்கலை தூண் ஒன்றை அமைத்திருக்கிறது.

மாமல்லபுரம்: சிற்பக்கலை தூண் சர்ச்சையும்... அமைச்சரின் விளக்கமும்!

பூம்புகார்-தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 45 அடி உயரம் கொண்ட சிற்பக்கலை தூண் ஒன்றை அமைத்திருக்கிறது.

Published:Updated:
மாமல்லபுரம் சிற்பக்கலை தூண்

செஸ் ஒலிம்பியாட்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை, அதாவது ஜூலை 28-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு முழுவீச்சில் செய்துவருகிறது. இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துவருகிறது.

மாமல்லபுரம் சிற்பக்கலை தூண்
மாமல்லபுரம் சிற்பக்கலை தூண்

இந்த விழாவுக்காகச் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையம் அருகே பசுமை பூங்கா அமைத்தல், வணக்கம் சென்னை பதாகை, கிழக்கு கடற்கரைச் சாலை அழகுபடுத்தும் பணி, தடுப்புச்சுவர் பழுதுபார்த்தால், வண்ணம் பூசுதல் என பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிற்பக்கலை தூண்

பூம்புகார்-தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 45 அடி உயரம் கொண்ட சிற்பக்கலை தூண் ஒன்றை அமைத்திருக்கிறது. பணிகள் அனைத்தும் முடிந்து இந்த தூணை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். நான்கு நிலைகளைக் கொண்ட இந்த தூண், பார்ப்பவர்களைக் கவரும் வகையில் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், இந்த தூணை மாமல்லபுரம் சிற்பிகளைக் கொண்டு செய்யாமல் வடமாநிலத்தவரைக் கொண்டு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சிற்பி இளையராஜா
சிற்பி இளையராஜா

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பி இளையராஜாவிடம் பேசினோம். ``நான் சிற்பக்கலை படித்துக் கடந்த 20 வருடங்களாகச் சிற்பியாக இருக்கிறேன். மாமல்லபுரம் சிற்பிகள் உலகப் புகழ் பெற்றவர்கள். இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சிற்பங்களை நாங்கள் செய்துவருகிறோம். ஆனால், மாமல்லபுரத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த சிற்பக்கலை தூணை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கிறார்கள். பூம்புகார் நிறுவனம் எங்களைத் தொடர்ந்து புறக்கணித்துக்கொண்டே இருக்கிறது. மாமல்லபுரத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பல சிலை அமைப்பு அந்த தூணில் இடம் பெற்றிருக்கிறது. பூம்புகார் நிறுவனம் எங்களிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் எங்களை அவமானப்படுத்தியிருக்கிறது" என்றார்.

தா.மோ.அன்பரசன்
தா.மோ.அன்பரசன்

இந்த விவகாரம் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் பேசினோம். ``கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அந்த சிற்பக்கலைத்தூண் கட்டும் டெண்டர் விடப்பட்டது. கிடப்பில் கிடந்த வேலையை நாங்கள் துரிதப்படுத்தியிருக்கிறோம். தி.மு.க ஆட்சிக்குப் பிறகு மாமல்லபுரம் சிற்ப கலைஞர்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செய்துவருகிறோம். அவர்களின் முன்னேற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு செய்துவருகிறது. இனியும் கண்டிப்பாகத் தொடர்ந்து செய்யும்" என்றார்.