Published:Updated:

கரூர்: ``புலியூரை, பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆக்கப் பாக்குறாங்க!" - குற்றம்சாட்டும் பாஜக கவுன்சிலர்

தர்ணா போராட்டத்தில் விஜயகுமார்

கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பேரூராட்சியை, பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் நடந்ததுபோல், பட்டியல் சமூக கவுன்சிலரை தலைவர் பதவியில் அமரவைக்கவிடாமல், தி.மு.க-வினர் தடுக்கப் பார்ப்பதாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரூர்: ``புலியூரை, பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆக்கப் பாக்குறாங்க!" - குற்றம்சாட்டும் பாஜக கவுன்சிலர்

கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பேரூராட்சியை, பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் நடந்ததுபோல், பட்டியல் சமூக கவுன்சிலரை தலைவர் பதவியில் அமரவைக்கவிடாமல், தி.மு.க-வினர் தடுக்கப் பார்ப்பதாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published:Updated:
தர்ணா போராட்டத்தில் விஜயகுமார்

கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பேரூராட்சியை, பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் நடந்ததுபோல், பட்டியல் சமூக கவுன்சிலரை தலைவர் பதவியில் அமரவைக்கவிடாமல், தி.மு.க-வினர் தடுக்கப் பார்ப்பதாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புலியூர் பேரூராட்சி
புலியூர் பேரூராட்சி
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதில் தி.மு.க 12, பா.ஜ.க 1, சி.பி.ஐ 1, சுயேச்சை 1 எனக் கைப்பற்றினர். இந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சி.பி.ஐ கட்சிக்கு, புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சி.பி.ஐ வேட்பாளராக கலாராணி என்பவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் சி.பி.ஐ வேட்பாளர் கலாராணிக்கு ஆதரவு அளிக்காமல் தி.மு.க-வினர் ஒன்றிணைந்து 3-வது வார்டில் தேர்வு செய்யப்பட்ட தி.மு.க உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராகத் தேர்வு செய்து, அவர் வெற்றிபெற்றதாக அறிவித்தனர். பின்னர், தி.மு.க தலைவர் விடுத்த அறிக்கையின் காரணமாக, அடுத்த இரண்டு நாள்களில் புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவியை புவனேஸ்வரி ராஜினாமா செய்தார்.

வெளியேறும் கலாராணி
வெளியேறும் கலாராணி

இதனைத்தொடர்ந்து மீண்டும் கடந்த 26-ம் தேதி நடைபெற்ற புலியூர் பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில், தி.மு.க உறுப்பினர்கள் பங்கேற்காததால், மறுபடியும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. புலியூர் பேரூர் கழக செயலாளரும், புலியூர் பேரூராட்சித் துணைத் தலைவருமான அம்மையப்பன் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தன்னை, இரண்டு முறை பதவியேற்க விடாமல் தடுத்ததாக கலாராணி குற்றம்சாட்டியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், இன்று பேரூராட்சியின் வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சி.பி.ஐ.எம், பா.ஜ.க உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். சி.பி.ஐ உறுப்பினர் கலாராணி கூட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில் வெளியேறினார். அவரை தொடர்ந்து, பா.ஜ.க உறுப்பினர் விஜயகுமார் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமையில் பா.ஜ.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயகுமாருக்கு ஆதரவளித்த பா.ஜ.கவினர்
விஜயகுமாருக்கு ஆதரவளித்த பா.ஜ.கவினர்

இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகுமாரிடம் பேசினோம். ``புலியூர் பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், மீண்டும் தேர்தலை நடத்தி புலியூர் பேரூராட்சித் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யாமல் நியமன குழு உறுப்பினர் தேர்தலை நடத்தக் கூடாது எனத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தும், தேர்தலை நடத்தி முடித்து விட்டனர். பேரூராட்சித் தலைவர் இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் எந்தவித வளர்ச்சித் திட்டப் பணிகளும் நடைபெறாமல் முடங்கி உள்ளன. பேரூராட்சித் தலைவர் பதவி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால், அவர்களைத் தலைவர் பதவி ஏற்க விடாமல் தி.மு.க-வினர் தடுத்து வருகின்றனர்.

பாப்பாப்பட்டி கீரிப்பட்டி போன்று தலைவர் பதவியை ஏற்க விடாமல் தடுத்து வருவது, ஜனநாயகத்திற்கு எதிரானது. இதை பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது. தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் வரை எனது போராட்டத்தை விடாமல் தொடர்வேன். தி.மு.க-வினர் இந்த விவகாரத்தில் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகின்றனர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism