Published:Updated:

வேலூர்: ``ஸ்மார்ட் சிட்டி குளறுபடிகளுக்கு அதிமுக-தான் காரணம்!" - மேயர் சுஜாதா விளக்கம்

அடி குழாய் - மேயர் சுஜாதா

அடி குழாயை அகற்றாமலேயே கால்வாய் கட்டிய விவகாரத்தில், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, பணியில் கவனக்குறைவாக இருந்த 2-வது மண்டல உதவி பொறியாளர் செல்வராஜிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தெரிவித்திருக்கிறார்.

வேலூர்: ``ஸ்மார்ட் சிட்டி குளறுபடிகளுக்கு அதிமுக-தான் காரணம்!" - மேயர் சுஜாதா விளக்கம்

அடி குழாயை அகற்றாமலேயே கால்வாய் கட்டிய விவகாரத்தில், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, பணியில் கவனக்குறைவாக இருந்த 2-வது மண்டல உதவி பொறியாளர் செல்வராஜிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அடி குழாய் - மேயர் சுஜாதா

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், வேலூர் மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரகதியில் வேலைகள் நடப்பதால், கோடி கோடியாகப் பணம் விரயமாவதுடன், ஏகப்பட்ட முறைகேடுகளும் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பேரி காளியம்மன் கோயில் தெருவில் சமீபத்தில் இரவோடு இரவாக சிமென்ட் ரோடு போடப்பட்டது. தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டூவீலரைக்கூட அப்புறப்படுத்தாமல், சிமென்ட் கலவையைக் கொட்டி டூவீலரின் டயர்களைப் புதைத்தனர். விடிந்து வந்து பார்த்த டூவீலரின் உரிமையாளர் கடப்பாரையால் குத்தி பள்ளம் தோண்டி, வண்டியை எடுத்துச் சென்றார்.

அடி குழாய்
அடி குழாய்

டூவீலர் சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார்ச்சாலை போட்டனர். இந்தப் புகைப்படங்களெல்லாம் சமூக வலைதளங்கள் வழியாகப் பரவி, வேலூர் மாநகராட்சிமீது கடும் சர்ச்சையைக் கிளப்பின. இந்த நிலையில், வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி விஜயராகவபுரம் இரண்டாவது தெருவிலும் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் நடைபெற்று வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கால்வாய் போடும்போது, அங்கிருந்த குடிநீர் அடி குழாயை அகற்றாமலேயே கான்கிரீட் கலவையைக் கொட்டி கட்டியிருக்கிறார்கள். இதில் அடி குழாய் புதையுண்டு போனது. இது குறித்து, இன்று ஜூனியர் விகடனில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கால்வாயோடு புதைக்கப்பட்ட அடி குழாயை அகற்றியது மாநகராட்சி நிர்வாகம். அதோடு, ‘குட்டி’ சரவணன் என்பவரது நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவர் இனி வரும் காலங்களில் வேலூர் மாநகராட்சியில் எந்த விதமான ஒப்பந்தத்தையும் எடுக்க முடியாது என்றும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.

மேயர் சுஜாதா
மேயர் சுஜாதா

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, ‘‘இப்படியான குளறுபடிகள் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஆணையாளரிடம் கூறியிருக்கிறேன். குடிநீர் அடி குழாயை புதைத்து கால்வாய் கட்டிய ஒப்பந்தததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். இந்த ஒப்பந்தம் அ.தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்டது. தகுதியில்லாதவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அனைத்து குளறுபடிகளுக்குமே கடந்த ஆட்சிதான் காரணம். அதேபோல, இதுசம்பந்தமாக இரண்டாவது மண்டலக் குழுவின் உதவி பொறியாளர் செல்வராஜிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவிருக்கிறேன். இப்படியான புகார்கள்மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்றார்.