Published:Updated:

கோவை: அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய திமுக மேயர் ரேஸ் நிர்வாகிகள் - கடுகடுத்த செந்தில் பாலாஜி!

கோவை திமுக

கோவை தி.மு.க செயற்குழு கூட்டத்தில் மேயர் ரேஸில் உள்ள லக்குமி இளஞ்செல்வி கணவரும், மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் மற்றும் நிவேதாவின் தந்தையும், மற்றொரு மாவட்ட பொறுப்பாளருமான மருதமலை சேனாதிபதி ஆகியோர் சர்ச்சையில் சிக்கினர்.

கோவை: அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய திமுக மேயர் ரேஸ் நிர்வாகிகள் - கடுகடுத்த செந்தில் பாலாஜி!

கோவை தி.மு.க செயற்குழு கூட்டத்தில் மேயர் ரேஸில் உள்ள லக்குமி இளஞ்செல்வி கணவரும், மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் மற்றும் நிவேதாவின் தந்தையும், மற்றொரு மாவட்ட பொறுப்பாளருமான மருதமலை சேனாதிபதி ஆகியோர் சர்ச்சையில் சிக்கினர்.

Published:Updated:
கோவை திமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது கோவை. தேர்தல் முடிந்தும் அந்த பரபரப்பு ஓயவில்லை. கோவை மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றுவது யார் என்ற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் வெற்றிக்கு பிறகு தி.மு.க-வின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் காளப்பட்டி பகுதியில் நடந்தது. முன்னதாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக வெற்றி பெற்ற கவுன்சிலர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து பேசினார்.

கூட்டம்
கூட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேயர் கனவுடன் களப்பணியாற்றி, கடைசி நேரத்தில் சீட் கிடைக்காமல் அதிருப்தியிலிருந்த மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், மேயர் ரேஸில் உள்ள லக்குமி இளஞ்செல்வியின் கணவரும், மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் மற்றும் நிவேதாவின் தந்தையும், மற்றொரு மாவட்ட பொறுப்பாளருமான மருதமலை சேனாதிபதி ஆகியோர் சர்ச்சையில் சிக்கினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர்தல் வெற்றியால் கூட்டத்தில் பலரும் உற்சாகமாக இருக்க, செந்தில் பாலாஜி எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் மிகவும் இயல்பாகவே காணப்பட்டார். கட்சிக்காரர்கள் அவருக்கு மிகப்பெரிய மாலையை எடுத்துவர, ``அதெல்லாம் வேண்டாம்" என்று மறுத்துவிட்டார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மேடைக்கு வந்ததும், தன் அருகில் அமர்ந்திருந்த பையா கிருஷ்ணனை எழுப்பி, அங்கு பழனிசாமியை அமர வைத்தார். இடையில் மனுக் கொடுக்க வந்த அனைவரிடமும் மனுக்களை வாங்கிவிட்டு, ``பார்த்துக் கொள்கிறேன்..." என்று கைக்கூப்பி பதிலளித்தார்.

முதலில் மைக் பிடித்த தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன், ``செந்தில் பாலாஜி கோவை வருவதற்கு முன்பு ஒருமுறை அவரை அறிவாலயத்தில் சந்தித்தேன். அப்போது, அரசியலில் நான் பின்பற்றுவது உங்களைத்தான் என்று அவரிடம் கூறினேன். அடுத்தநாள் காலை, அவரை கோவை பொறுப்பு அமைச்சராக நியமித்ததும் மகிழ்ச்சியாகிவிட்டேன். கோவை தி.மு.க-வின் ஓட்டை என்று கூறினர். அதைக் கோட்டையாக மாற்றியுள்ளோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரைத் தொடர்ந்து, மீனா ஜெயக்குமார் பேசத் தொடங்கும்போதே, ``எல்லாரும் மகளிரை விட்டுவிடுகின்றனர். ஆனால், நான் விடமாட்டேன். செந்தில் பாலாஜியை இங்கு நியமித்தவுடன் ஒரு சரியான ஆம்பிளையைதான் அனுப்பியுள்ளனர் என நண்பர்களிடம் கூறினேன்" என்று யாரையோ மறைமுகமாக தாக்குவது போலவே அவர் பேச்சு இருந்தது. சிறிது நேரத்தில், ``கூடுதல் நேரம் வேண்டும்.” என்றவர்,

மீனா ஜெயக்குமார்
மீனா ஜெயக்குமார்

``என் வெற்றியை தடுத்த முதல் ஆள் கார்த்தி தான். அவர் பலமுறை நிகழ்ச்சிக்காக அழைக்கும்போது போனில், `உங்களுக்காகதான் வரேன்’ என்று கூறுவார். அப்போது தவிர்த்துவிடுவேன். ஒருமுறை என் கணவர் போனை எடுத்தபோது அங்கு வார்த்தை இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசியவர், தனது சாதியை இரண்டு முறை குறிப்பிட்டு, ``என்னை தீண்டத்தகாதவர் மாதிரி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்று கார்த்தி பரப்பினார்" என்றார். பின்னர் மீனா ஜெயக்குமார் ஒரு கட்டத்தில் கார்த்தியை ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார். அதனால், கூட்டத்தில் பயங்கர சலசலப்பு ஏற்பட மேயர் ரேஸில் இருந்த கார்த்திக் கடும் அப்செட் ஆகிவிட்டார்.

செந்தில் பாலாஜியும் கடுப்பாகிபோனார். பின்னர் கூட்டத்தில் இயல்புநிலை திரும்ப சில நிமிடங்கள் ஆனது. மீனா ஜெயக்குமாரின் பேச்சால், கார்த்தி சர்ச்சையில் சிக்கிய சில நிமிடங்களிலேயே மேயர் ரேஸில் உள்ள மருதமலை சேனாதிபதியும் சர்ச்சையில் சிக்கினார்.

மீனாவுக்கு அடுத்ததாகப் பேசிய சேனாதிபதி, ``கரூரிலிருந்து வந்தவர்கள் மிகப்பெரிய போர்ப்படை. கரூர்காரர்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம். இந்த வெற்றியை அவர்களைத் தாண்டி யாராலும் கொடுத்திருக்க முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜி இரவு பகல் தூங்காமல், சாப்பிடாமல் வேலை பார்க்கிறார். மகளிரணியில் ஒருவருரை தேர்தலை நிற்க சொன்னதற்கு, `என்கிட்ட எங்க காசு?' என்றார்.

செயற்குழு கூட்டம்
செயற்குழு கூட்டம்

நான், நில்லுங்க பார்த்துக்கலாம் என்றேன். ஆனால், தேர்தலில் சீட் கிடைத்த பிறகு அவர் போனே செய்யவில்லை. ஏன் கூப்பிடவில்லை? என்று கேட்டேன். அதற்கு அவர், `தேர்தல் முடிஞ்சதும் எனக்கு மூணு கொலுசு கொடுக்க சொல்லுங்க' எனக்கூறினார்" என்று சேனாதிபதி கூறியதும் செந்தில் பாலாஜி முறைத்துப் பார்த்தார்.

அதையடுத்து, உடனடியாக மேடையிலிருந்த சிலர் சேனாதிபதியை அலர்ட் செய்தனர்.

கோவையில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழிலேயே ‘இது நீதிமன்ற தீர்ப்புக்குட்பட்டது.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்தநிலையில், இதை மிகவும் தாமதமாக உணர்ந்து பிறகு சுதாரித்துக் கொண்ட சேனாதிபதி, ``ஒரு ரூபாய் செலவு இல்லாமல் செந்தில் பாலாஜி இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார்..." என்று இரண்டு முறை அழுத்தி கூறிவிட்டு அமர்ந்தார்.

அடுத்து பேசிய பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், எடுத்த எடுப்பிலேயே, ``செந்தில் பாலாஜிக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவோம்" என்றவர், தொடர்ந்து அவரை கோவையில் தொடங்கி மகாபாரதம் வரை இணைத்து பாராட்டினார். ``செந்தில் பாலாஜியின் ஒரு முகத்தை தான் பார்த்துள்ளோம்.

அந்நியன் படத்தில் வருவது போல எதிரிகளை அசுர பலத்துடன் வீழ்த்துவது அவரின் மறுமுகம்” என்று நீண்ட நேரம் இழுக்கவே, ``தலைவா.. யாரும் மதியம் சாப்பாடே சாப்பிடலை சீக்கிரமா முடிச்சுவிடுங்க” என்று ஓப்பனாகவே கமெண்ட் அடித்தனர் தி.மு.க-வினர்.

கடைசியாக மைக் பிடித்த செந்தில் பாலாஜி, ``தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்காமல், தேர்தலில் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு... நல்லா புரிஞ்சுக்கனும்.. வாய்ப்பு கிடைக்காவிடினும், தேர்தலில் சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு அரசு பொறுப்புகள் கொடுத்து அங்கீகரிக்கப்படுவார்கள்.

வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் உள்ளடி வேலைகள் செய்தவர்களின் பட்டியலும் இருக்கிறது. கனவில் கூட அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கிடைக்காது” என்று எச்சரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism