Published:Updated:

திருப்பூர் ரயில் நிலையத்தில் `இந்தி' வார்த்தை; கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அகற்றிய அதிகாரிகள்!

திருப்பூர் ரயில்வே நிலையம்

திருப்பூர் ரயில் நிலையத்திலுள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் `இன்ஃபர்மேஷன் சென்டர்' எனக் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் தொடர்பு மையத்தில், அண்மையில் தமிழுக்கு பதில் இந்தியில் `சகயோக்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

மத்திய அரசு இந்தியை மறைமுகமாக திணித்து வருவதாக தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டிவருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவும் மத்திய அரசு முயன்றுவருவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் ரயில் நிலையத்திலுள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் `இன்ஃபர்மேஷன் சென்டர்' எனக் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் தொடர்பு மையத்தில், அண்மையில் தமிழுக்கு பதில் இந்தியில் `சகயோக்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

திருப்பூர்
திருப்பூர்

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, நேற்றைய தினம் ரயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு இந்தியில் எழுதி ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை அகற்றினர்.