Published:Updated:

அண்ணாமலையின் கள்ள ஓட்டு ட்வீட்; தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் - கடைசி நேரத்தில் வாக்களித்த முருகன்!

எல். முருகன்

``மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் கள்ள வாக்காக செலுத்தவில்லை... அவர்தான் வந்து செலுத்தவேண்டும்" என்று விளக்கமளித்தது. - தேர்தல் ஆணையம்

அண்ணாமலையின் கள்ள ஓட்டு ட்வீட்; தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் - கடைசி நேரத்தில் வாக்களித்த முருகன்!

``மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் கள்ள வாக்காக செலுத்தவில்லை... அவர்தான் வந்து செலுத்தவேண்டும்" என்று விளக்கமளித்தது. - தேர்தல் ஆணையம்

Published:Updated:
எல். முருகன்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்கு பதிவு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாக்கை செலுத்து வருகின்றனர்.

இன்று மதியம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரோ கள்ள வாக்காக போட்டுவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``மாண்புமிகு திரு. எல்.முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?

அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அறிவாலயம் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாகக் கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம். ஆளுங்கட்சிக்குச் சாதகமாகப் பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது" என்று பதிவிட்டிருந்தார்.

அண்ணாமலையின் இந்த ட்வீட் தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையம், ``மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் கள்ள வாக்காக செலுத்தவில்லை... அவர்தான் வந்து செலுத்தவேண்டும்" என்று விளக்கமளித்தது.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கிழக்கு அண்ணாநகர் வாக்குச்சாவடியில் கடைசி நேரத்தில் வந்து செலுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism