Published:Updated:

``சாலைகள் நடிகைகள் கன்னம்போல இருக்க வேண்டும்!" - ராஜஸ்தான் அமைச்சர் பேச்சால் சர்ச்சை

ராஜேந்திர சிங்
News
ராஜேந்திர சிங்

சாலைகள் நடிகை கத்ரீனா கைஃப் கன்னம் போன்று இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

ராஜஸ்தானில் சமீபத்தில் அதிருப்தியாளர்களைச் சரிக்கட்ட அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. புதிய அரசில் அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் ராஜேந்திர சிங் குதா தன் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் மக்கள் தங்களது பகுதியில் சாலைகள் சரியில்லை என்று குறை கூறினர். அப்போது, ராஜேந்திர சிங் குதா தன் அருகில் நின்ற பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளரிடம், ``என் தொகுதியில் சாலைகள் ஹேமா மாலினியின் கன்னம் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வயதாகிவிட்டதால் சாலைகள் நடிகை கத்ரீனா கைஃப் கன்னங்கள் போன்றாவது இருக்க வேண்டும்!" என்று கூறினார். அமைச்சரின் கருத்து அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்திருக்கிறது.

 கத்ரீனா கைஃப் !
கத்ரீனா கைஃப் !

இது தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராம்லால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, ``பெண்கள் குறித்து அநாகரிகமாகப் பேசிய அமைச்சர்மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். அமைச்சரின் இந்தச் சர்ச்சைக் கருத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த அசோக் கெலாட், ``அமைச்சர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. என்ன பேசினார் என்று கண்டுபிடிப்போம். ஆனால் ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மாநில அமைச்சர்களின் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் எல்லைக்குள் இருக்க வேண்டும். அளவுக்கு மீறி அரசியல் செய்தால் யாருக்கும் பிடிக்காது" என்று எச்சரித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அசோக் கெலாட்
அசோக் கெலாட்

இதற்கு முன்பு சாலைகளை நடிகைகளின் கன்னத்தோடு வேறு அரசியல்வாதிகளும் ஒப்பிட்டிருக்கின்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் 2005-ம் ஆண்டு பீகார் சாலைகள் விரைவில் நடிகை ஹேமா மாலினியின் கன்னம்போல் மாறும் என்று கூறியிருந்தார். அதேபோல, 2013-ம் ஆண்டு உத்தரப்பிரதேச அமைச்சர் ராஜாராம் பாண்டே அளித்த பேட்டியில், தன் தொகுதியில் சாலைகளை ஹேமா மாலினி, மாதுரி தீட்ஷித் ஆகியோரின் கன்னங்கள் போன்று மாற்றுவேன் என்று தெரிவித்திருந்தார்.