Published:Updated:

தெலங்கானா: ஆளுநர் உரை மிஸ்ஸிங்; தமிழிசை அதிர்ச்சி... வெடித்த மோதல்!

தமிழிசை சௌந்தரராஜன் - சந்திரசேகர ராவ்

தெலங்கானா அரசின் இன்றைய சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் உரை இல்லாமலேயே தொடங்கியிருக்கிறது.

தெலங்கானா: ஆளுநர் உரை மிஸ்ஸிங்; தமிழிசை அதிர்ச்சி... வெடித்த மோதல்!

தெலங்கானா அரசின் இன்றைய சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் உரை இல்லாமலேயே தொடங்கியிருக்கிறது.

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன் - சந்திரசேகர ராவ்

தெலங்கானா அரசின் இன்றைய சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் உரை இல்லாமலேயே தொடங்கியிருக்கிறது. முதல் நாளான இன்று மாநில அரசின் 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தெலங்கானா நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் தாக்கல் செய்தார். மாநில அரசின் இந்தச் செயல்பாட்டால் அதிருப்தியடைந்திருக்கும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இது மாநில அரசின் மரபை மீறிய செயல் எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தெலங்கானா சட்டமன்றம்
தெலங்கானா சட்டமன்றம்

கடந்த சில நாள்களுக்கு முன்னர், தெலங்கானா அரசு மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ``தெலங்கானா அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 7-ம் தேதி நடைபெறும். நிதியமைச்சர் ஹரிஷ் ராவ் மாநில அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ``இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்பதால், ஆளுநர் உரை இல்லாமல் நேரடியாகவே சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கும்" என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசின் இந்த முடிவுக்கு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் குமார் (Bandi Sanjay Kumar), ``இந்தியாவுக்குப் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க வேண்டும் எனக் கூறி வரும் சந்திரசேகர ராவ், இப்போதிருக்கும் அரசியலமைப்புச் சட்டங்களை மதிக்கிறாரா... இல்லையே?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ``இது வேண்டுமென்றே செய்யும் செயல். பா.ஜ.க மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை சந்திரசேகர ராவ் ஆளுநர்மீது காண்பிக்கிறார்" எனவும் குற்றம்சாட்டினார்.

தெலங்கானா பா.ஜ.க மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார்
தெலங்கானா பா.ஜ.க மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார்

அதேபோல, தெலங்கானா காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜீவன் ரெட்டி (Thatiparthi Jeevan Reddy), ``புதிய நிதியாண்டுக்கான (2022-23) சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது ஆளுநர் உரை கட்டாயம் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அந்த நிதியாண்டுக்கான மாநில அரசின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்" என அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

தெலங்கானா காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜீவன் ரெட்டி
தெலங்கானா காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜீவன் ரெட்டி
விக்கிபீடியா

ஆனால், மாநில அரசு தரப்போ, ``முதன்முறையாக ஆண்டு தொடக்கத்தில் கூட்டப்படும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதுதான் ஆளுநர் உரை கட்டாயம் தேவை என சட்ட விதி இருக்கிறது, இந்த கூட்டத்தொடர் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கிய முதல் கூட்டத்தொடரின் தொடர்ச்சிதான். எனவே, ஆளுநர் உரை அவசியமில்லை" என சட்ட விதியைச் சுட்டிக்காட்டி விளக்கமளித்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., அரசு அதிகாரிகள் மற்றும் சட்டப்பேரவையின் இரு அவைகளின் தலைவர்களும் கலந்துகொண்டு நேற்றைய தினம் விரிவான ஆலோசனை மேற்கொண்டனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

இந்த நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ``ஆளுநரின் உரை இல்லாமல் ஆண்டின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவது மரபை மீறிய செயல். ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடினால் அதைப் புதிய கூட்டத்தொடராகத்தான் கருத வேண்டும். ஆளுநர் உரை இடம்பெறாததால் முந்தைய ஆண்டில் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கக்கூடிய வாய்ப்பை பேரவை உறுப்பினர்கள் இழந்துவிட்டனர்" எனத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்துவந்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தும், மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளையும் கூறிவருகிறார்.

மேலும், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே என அடுத்தடுத்து பா.ஜ.க ஆட்சியில் அல்லாத மாநிலங்களின் முதல்வர்களைச் சந்தித்துவருகிறார்.

மூன்றாவது அணி
மூன்றாவது அணி

பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளுநர் - முதல்வர் மோதல் நடந்துவரும் சூழ்நிலையில், தற்போது தெலங்கானாவிலும் மோதல் போக்கு தீவிரமடைந்திருக்கிறது. ஏற்கெனவே, மேடாரம் ஜாத்திரை விழாவில் ஆளுநருக்குரிய மரியாதை வழங்கப்படவில்லை எனச் சர்ச்சை எழுந்திருந்தது. அதேபோல, ராஜ்பவனில் நடந்த குடியரசு தின விழாவில், தெலங்கானா அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ளாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஆளுநர் உரை இல்லாமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியிருப்பதால், தெலங்கானா முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாகத் தொடங்கியிருக்கிறது என அந்த மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism