Published:Updated:

அதிமுக உட்கட்சி தேர்தல்: "தலைமை சொல்வதை தான் செய்ய முடியும்"- வெளியான வீடியோ... மா.செ பதில் என்ன?

தூசி.மோகன் பேசும் வீடியோ காட்சி

அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வரும் நிர்வாகிகளிடம், திருவண்ணாமலை வடக்கு மா.செ, "அந்த 8 பேரை தவிர கூடுதலாக யாரும் பணம் கட்ட கூடாது. இது தலைமையின் உத்தரவு" என்று பேசும் வீடியோ வெளியாகி புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தல்: "தலைமை சொல்வதை தான் செய்ய முடியும்"- வெளியான வீடியோ... மா.செ பதில் என்ன?

அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வரும் நிர்வாகிகளிடம், திருவண்ணாமலை வடக்கு மா.செ, "அந்த 8 பேரை தவிர கூடுதலாக யாரும் பணம் கட்ட கூடாது. இது தலைமையின் உத்தரவு" என்று பேசும் வீடியோ வெளியாகி புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தூசி.மோகன் பேசும் வீடியோ காட்சி

ஒன்றிய, நகர, பேரூராட்சிகளை சேர்ந்த அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல், அக்கட்சியின் தலைமையால் அண்மையில் அறிவிக்கப்பட்டு மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருப்பவர் தான் முன்னாள் எம்.எல்.ஏ தூசி.மோகன். அம்மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் ஒன்றியத்தில் அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் சில தினங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. அப்போது, ஒன்றிய கட்சி பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் " வாங்கு...", "வாங்கமாட்டேன்..." என கட்சி நிர்வாகிகளிடையே கடுமையான குஸ்தி நடைபெற்றுள்ளது.

அதிமுக தலைமை
அதிமுக தலைமை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் இறுதி கட்டத்தில் மா.செயலாளர் தூசி.மோகன், "இது தலைமை உத்தரவு" என நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் கட்சி நிர்வாகிகள் சிலர், "விண்ணப்பத்துக்கு நாங்க பணம் கட்டுறதா இல்லையா..." என்று கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட, "முன்பும் பிரச்னை பண்ண, இப்பவும் பண்றீங்க. பணம் கட்ட முடியாது... பணம் கட்ட தேவையில்லை. ஏன் சொல்றேன் அப்படினா, ஒன்றிய செயலாளர் பதவிக்கு உட்பட 8 பதவிகளுக்கு பணம் கட்டுகிறோமா... அதுக்கு மேல வாங்க கூடாதுனு தான் தலைமை உத்தரவு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால, அதுக்குமேல பணம் கட்ட தேவையில்ல. போன முறை இப்படி பணம் வாங்கியதால எவ்வளவு பிரச்னை சந்திச்சோம் என இவருக்கே தெரியும். அண்ணே, வாங்க முடியாதுனே. எங்க தலைமை உத்தரவு என்னவோ அதைதான் நான் செய்ய முடியும்" என்று முன்னாள் எம்.எல்.ஏ., தூசி.மோகன் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், "கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு பன்னீர்செல்வம் என்பவரையும், மேற்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு பொய்யாமை என்பவரையும் தவிர வேறு யாரையும் விண்ணப்பக் கட்டணம் செலுத்து வேண்டாம் என கூறிவிட்டார் மாவட்ட செயலாளர். இதை ஏன் என கேட்டு விண்ணப்ப கட்டணம் செலுத்த சென்ற தொண்டர்களை, மிரட்டும் தோணியில் பேசி அனுப்பியுள்ளார்.

தூசி மோகன்
தூசி மோகன்

கூடுதலாக யாரும் விண்ணப்ப கட்டணம் செலுத்து கூடாது என்று அவர் பேசும் வீடியோ தான் இப்போது வெளியாகி இருக்கிறது. அவர் மட்டும், மாவட்ட செயலாளர் பொறுப்புடன் சேர்த்து வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவியையும் கட்சி தலைமைக்கு தெரியாமல் வைத்திருக்கலாம். ஆனால், விருப்பப்பட்ட தொண்டர்கள் தேர்தலுக்கு விண்ணப்ப கட்டணம் நேர்மையாக செலுத்த முயற்சிப்பது தவறானதா.. " என்று ஆதங்கமாக பேசினர் உட்கட்சி விவரம் அறிந்த சில அதிமுக நிர்வாகிகள்.

இது குறித்து விளக்கம் கேட்க மா.செ தூசி.மோகனை தொடர்பு கொண்டு பேசினோம். ``கட்சி தலைமை நியமித்த தேர்தல் பொறுப்பாளர்கள் பணி முடிந்து சென்ற பின்னர் வந்து, பணம் கட்டவேண்டும் என்கிறார்கள். ரசீதில் கையெழுத்து போடுவதற்கான பவரோ, விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரமோ என்னிடம் இல்லை. தேர்தல் பொறுப்பாளர்கள் தான் போட முடியும். அதே போல ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் கொடுக்கலாம். ஆனால், ஒருத்தர் ஒரு விண்ணப்பம் வாங்கி சென்று, 9 நகல் எடுத்து ஒன்பது பேருக்கும் பணம் கட்ட வேண்டும் என்கிறார். அதே போல மூன்று டீம் கேட்கிறது. அதனால் தான், 'தேர்தல் நேரம் முடிந்துவிட்டது. காலையிலேயே வந்திருக்கலாம்" என்றேன்.

அதிமுக
அதிமுக

உடனே அதில் ஒருவர், 'கலசப்பாக்கம் வருவாரு இல்ல... அப்ப பாத்துக்கலாம்" என்று மிரட்டும் தோணியில் பேசினார். "நான் இப்பவே அங்கு வருவேன். என்ன மிரட்டி பார்குறியா. நீங்க லேட்டா வந்தது தப்பு"னு சொன்னேன். ஆனால், இவர்கள் சொல்வது போல இல்லை. அநேக பகுதியில் இருந்து தொண்டர்கள் வந்து, அவர்களுடைய விருப்பத்தின் பேரிலே நிறைய பேர் பணம் கட்டி விண்ணப்பம் பெற்றிருக்காங்க. அதற்கான பட்டியலும் என்னிடம் இருக்கிறது. வேறு யாரிடமும் வாங்கவில்லை என்றால் தானே யோசிக்கனும். நாங்க நன்றாகவே இந்த தேர்தலை பண்ணியிருக்கிறோம்.

தூசி. மோகன் பேசும் வீடியோ காட்சி
தூசி. மோகன் பேசும் வீடியோ காட்சி

இப்போ பிரச்னை செய்திருக்கும் கோஷ்டி, பிரச்னை பண்ண வேண்டும் என்பதற்காகவே வந்தவர்கள். ஏற்கனவே கலசப்பாக்கத்தில் 109 கிளை கழகம் தான் இருந்தது. தொண்டர்களுக்காக அதை 210 ஆக மாற்றி பொறுப்பு கொடுத்துள்ளோம். தேர்தலில் பணம் கட்டுவது அவர்களின் உரிமை. ஆனால், நேரம் முடிந்து வருவது அல்ல. ஒன்றிய செயலாளர் பதவிக்கு மொத்தம் 4 பேர் பணம் கட்டி உள்ளனர்" என்றார் விரிவாக.