Published:Updated:

அதிமுக நிர்வாகிகளைச் சூழும் கொரோனா... திட்டமிட்டப்படி நடக்குமா பொதுக்குழு?

கொரோனா வைரஸ்

அதிமுக-வில் மூத்த நிர்வாகிகள் பலரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி தரப்பினரால் கூட்டப்பட்டிருக்கும் பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுதிருக்கிறது!

அதிமுக நிர்வாகிகளைச் சூழும் கொரோனா... திட்டமிட்டப்படி நடக்குமா பொதுக்குழு?

அதிமுக-வில் மூத்த நிர்வாகிகள் பலரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி தரப்பினரால் கூட்டப்பட்டிருக்கும் பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுதிருக்கிறது!

Published:Updated:
கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு தொற்று பாதிப்பு 1,500-ஐ நெருங்குகிறது. இதன் காரணமாக பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில், அ.தி.மு.க தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தொற்று பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.

அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி

அதன்படி, முன்னாள் சபாநாயகர் தனபால், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர் வீட்டுக்கு நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு அறிகுறி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ஜூன் 27-ம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு சிலர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்

ஒற்றைத் தலைமையை அடைந்தே ஆக வேண்டும் என்றும், அதற்காக ஜூலை 11-ம் தேதி மீண்டும் அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்ட எடப்பாடி தரப்பும், அதைத் தடுக்கும் முயற்சியில் பன்னீர் தரப்பும் தீவிரமாக முயற்சி செய்யும் வேளையில், கட்சிக்குள் கொரோனா பரவல் ஏற்பட்டு, அந்தப் பணியைச் சுணக்கமடையச் செய்திருக்கிறது. இதனால், எடப்பாடி மற்றும் பன்னீர் தங்களைச் சந்திக்க வரும் நிர்வாகிகளை போனிலேயே தொடர்புகொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒருவேளை ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மத்தியில் கொரோனா பரவல் ஏற்பட்டால், அடுத்த பொதுக்குழு தள்ளிப்போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, மிகப்பெரிய அளவில் நடைபெறும் பொதுக்குழுவுக்கு, கொரோனாவைக் காட்டி அரசு தடைவிதிக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போதைய கொரோனா பாதிப்பு நான்கைந்து நாள்களில் சரியாகிவிடுவதாகவும், அதனால் திட்டமிட்டப்படி பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என்கிறார்கள் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவான தரப்பினர்.