Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: `புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்!’ - 10, 12-ம் வகுப்பு தேர்வுகளைத் தள்ளிவைத்த மகாராஷ்டிரா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் மகாராஷ்டிரா அரசு, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைத்திருக்கிறது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான கொரோனா தொற்று இருந்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் குறையவில்லை. இதையடுத்து மகாராஷ்டிரா அரசு 1-9, 11-ம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சிபெற்றதாக அறிவித்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் போராடிவருகின்றனர். ஆனால், திட்டமிட்டபடி நேரடியாகத் தேர்வு நடத்தப்படும் என்று மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. ஆனால், தற்போது தேர்வு நடைபெறும் தேதியை மாநில அரசு தள்ளி வைத்திருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் மற்றும் மே மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது தேர்வு நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை.

மீண்டும் கொரோனா தடுப்பூசி
மீண்டும் கொரோனா தடுப்பூசி

தொழில்நுட்ப தேர்வுகளுக்கான நுழைவுத்தேர்வுகள் நடக்க இருப்பதை கருத்தில்கொண்டு 12-ம் வகுப்புக்கு மே இறுதியில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 10-ம் வகுப்புக்குத் தேர்வு நடைபெறும். அரசு சுகாதார நிலைமையை தீவிரமாகக் கண்காணித்துவருகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா கடை உரிமையாளர்கள் சங்கம், புதிய லாக்டெளன் அமல்படுத்துவதற்கு முன்பு அரசுக்குச் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதன்படி கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்க அனுமதிக்கலாம் என்றும், அத்தியாவசியப் பயன்பாட்டுக் கடைகள் திறந்திருப்பது போன்று ஆன்லைன் வர்த்தகத்திலும் அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே டெலிவரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், பொதுமுடக்கம் என்பது வியாபாரிகளின் முதுகெலும்பை உடைப்பதாக இருக்கக் கூடாது என்றும்,

முதல்வர் உத்தவ் தாக்கரே
முதல்வர் உத்தவ் தாக்கரே

அதோடு பொது முடக்கத்துக்கு முன்பு வியாபாரிகளின் சம்பளப் பிரச்னை, மின் கட்டணம், வரி, கடன் போன்ற அம்சங்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்குக் கொடுத்திருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே மும்பையில் மீண்டும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருக்கிறது. மும்பையில் மட்டும் தினமும் 50,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு