Published:Updated:

ஆங்காங்கே தலைதூக்கும் திமுக கவுன்சிலர்களின் அத்துமீறல்கள்... என்ன செய்ய போகிறது திமுக தலைமை?!

முதல்வர் மு.க.ஸ்டாலின் - திமுக

மிரட்டல்விடுவது, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது, வீடு கட்டுபவர்களிடம் கமிஷன் வாங்குவது எனத் திமுக கவுன்சிலர்கள்மீது ஆங்காங்கே புகார்கள் எழுந்து வண்ணம் இருக்கின்றன. இவர்கள்மீது தி.மு.க தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும்..?

ஆங்காங்கே தலைதூக்கும் திமுக கவுன்சிலர்களின் அத்துமீறல்கள்... என்ன செய்ய போகிறது திமுக தலைமை?!

மிரட்டல்விடுவது, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது, வீடு கட்டுபவர்களிடம் கமிஷன் வாங்குவது எனத் திமுக கவுன்சிலர்கள்மீது ஆங்காங்கே புகார்கள் எழுந்து வண்ணம் இருக்கின்றன. இவர்கள்மீது தி.மு.க தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும்..?

Published:Updated:
முதல்வர் மு.க.ஸ்டாலின் - திமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இப்போது எங்கும் தி.மு.க கவுன்சிலர்கள்தான். அந்தளவு ஊரக மற்றும் நகர்ப்புற பதவிகளில் தி.மு.க இடம்பிடித்திருக்கிறது. தி.மு.க வெற்றி பெற்றதும், “நான் உங்களைக் கவனித்துக்கொண்டே இருப்பேன்”என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், “பெண்கள் தங்கள் திறனைக் காட்டும் நேரமிது. வீட்டில் உள்ள ஆண்களை நிர்வாகத்தில் தலையிடவிட வேண்டாம்” என தி.மு.க மகளிரணித் தலைவர் கனிமொழியும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் வீடு கட்ட பணம் கேட்கிறார்கள், மிரட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு முழுவதுமிருந்து தினந்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.

இதன் உச்சமாக பல்லாவரத்தில் பிரியாணி கடையில் பெண் கவுன்சிலரின் மைத்துனர் மாமூல் கேட்டு அடிதடியில் ஈடுபட்டது, சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிரஞ்சனா என்பவரின் கணவராவார் ஜெகதீனர் காவல்துறையை மிரட்டும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இதேபோல திட்டக்குடியில் முதியவரை மிரட்டியது, தண்டையார்பேட்டையில் வீடு கட்ட முயன்ற பெண்ணிடம் கமிஷன் கேட்டது எனப் பல்வேறு புகார்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.

கவுன்சிலர் பதவியேற்பு  விழா
கவுன்சிலர் பதவியேற்பு விழா

அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க கவுன்சிலர்களின் அட்ராசிட்டிகள் குறித்து விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்குத் தங்களின் பணி என்ன என்பது தெரியும். யாருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டதோ அவர்கள் தான் பணியைச் செய்ய வேண்டும். வேறு யாரேனும் தலையிட்டால், மீறினால் தலைமை நடவடிக்கை எடுக்கும்.” என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சர்ச்சைக்குள்ளாகும் தி.மு.க கவுன்சிலர்கள்மீது தி.மு.க தலைமை என்ன மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடும் எனத் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச்செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம். “தலைவர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “தாய்மார்கள் வெற்றி பெற்ற இடங்களில் அவர்கள்தான் அதிகாரம் செலுத்த வேண்டும். அந்த அதிகாரத்தில் எக்காரணம் கொண்டு அவர்களின் தந்தையோ, சகோதரரோ, கணவரோ, மகனோ தலையிடக் கூடாது. அவர்கள் அவர்களின் கடமையைச் சுதந்திரமாகச் செயல்பட வழிவகை செய்ய வேண்டும்” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். வெற்றி பெற்ற தாய்மார்கள் தி.மு.க மகளிரணித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்த போது “இது நமக்குக் கிடைத்திருக்கும் உரிமை. நமக்கு கிடைத்திருக்கும் அதிகாரம், பொறுப்பு. அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். உங்களின் பொறுப்பை, கடமையைச் செய்வதற்கு வேறு யாருக்கும் அதிகாரம் அளிக்க வேண்டாம்” என அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருந்தார்.

ஒவ்வொரு மாநகராட்சியின் மேயர்கள், குறிப்பாகச் சென்னை மாநகராட்சி மேயர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “வார்டு உறுப்பினர்களாக இருக்கும் சகோதரிகள் எக்காரணத்தை முன்னிட்டும் உறவினர்கள் என்ற முறையில் யாருக்கும் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டாம். தாங்களே தனித்துப் பணியாற்ற வேண்டும். அதில் மற்றவர்கள் தலையிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

திராவிட முன்னேற்ற கழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் சொன்னதன்படிதான் நடந்துகொள்வார். இதிலிருந்து விலகிச் செல்பவர்கள்மீது உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1,33,000 பதவிகளில் ஏதோ ஒருசிலர் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தி.மு.க உறுப்பினர்களும் தவறு செய்கிறார்கள் எனப் பொதுமைப்படுத்தக் கூடாது. இனியும் இப்படியான சிக்கல்கள் தொடர்ந்தால் முதல்வராகவும் கட்சியின் தலைவராகவும் தயவு தாடசன்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism