Published:Updated:

குற்றாலம்: சம பலத்துடன் இருந்த அதிமுக, திமுக; தள்ளிவைக்கப்பட்ட தலைவர் தேர்தல்! - என்ன காரணம்?!

குற்றாலம்

குற்றாலம் பேரூராட்சியில் திமுக-வும் அதிமுக-வும் சம பலத்துடன் இருந்ததால், பேரூராட்சித் தலைவர் பொறுப்பைக் கைப்பற்றப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. வெற்றிக்காக இரு தரப்பும் வைட்டமின்களை வாரியிறைத்தன.

குற்றாலம்: சம பலத்துடன் இருந்த அதிமுக, திமுக; தள்ளிவைக்கப்பட்ட தலைவர் தேர்தல்! - என்ன காரணம்?!

குற்றாலம் பேரூராட்சியில் திமுக-வும் அதிமுக-வும் சம பலத்துடன் இருந்ததால், பேரூராட்சித் தலைவர் பொறுப்பைக் கைப்பற்றப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. வெற்றிக்காக இரு தரப்பும் வைட்டமின்களை வாரியிறைத்தன.

Published:Updated:
குற்றாலம்

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் எட்டு வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க-வும் அதி.மு.க-வும் நேரடியாக மோதின. குறைவான வாக்குகளைக்கொண்ட வார்டுகளில் வெற்றியைக் கைப்பற்ற தொடக்கம் முதலாகவே வைட்டமின் `ப’ அருவியாகக் கொட்டியது.

தேர்தலில் தி.மு.க-வுக்கு நான்கு வார்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க-வுக்கு நான்கு வார்டுகளும் கிடைத்தன. இரு கட்சிகளும் சம பலத்துடன் இருந்ததால், வெற்றிகான கவுன்சிலருக்கு கிராக்கி ஏற்பட்டது. தி.மு.க சார்பாக குமார் பாண்டியனும், அ.தி.மு.க சார்பாக கணேஷ் தாமோதரனும் பேரூராட்சித் தலைவர் பொறுப்பைக் கைப்பற்ற தீவிரம் காட்டினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுற்றுலா மையமான குற்றாலத்தில் வாகன பார்க்கிங், லாட்ஜுகள், வணிக மையங்கள் அதிகம் இருப்பதால் பணம் புரளும் பேரூராட்சியாக உள்ளது. அதனால் இந்தப் பேரூராட்சித் தலைவர் பொறுப்புக்குக் கடுமையான போட்டி நிலவியது. இரு தரப்பினரும் தங்களின் கவுன்சிலர்களை சுற்றுலாவாக வெளியிடத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

குற்றாலம் மெயின் அருவி
குற்றாலம் மெயின் அருவி

இந்த நிலையில், இன்று பேரூராட்சி தலைவர் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், அ.தி.மு.க கவுன்சிலர்களான கணேஷ் தாமோதரன், தங்கப்பாண்டியன், மாரியம்மாள், ஜெயா ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தார்கள். ஆனால் தி.மு.க கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால் பேரூராட்சித் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளாட்சி மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் அறுதிப் பெரும்பான்மை குறைந்ததால் ,கூட்டம் தொடங்கிய 30 நிமிடங்கள் காத்திருந்தும் கவுன்சிலர்கள் வருகை தராததால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் குதிரைப் பேரம் நடக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பொதுமக்கள்

குற்றாலம் பேரூராட்சியில் இரு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதால், இரு கட்சியினரும் மாற்றுக் கட்சியின் கவுன்சிலர்களுக்கு கணிசமான வைட்டமின்களை கொடுக்கத் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், கவுன்சிலர்கள் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் பேரம் நடத்த முடியவில்லை. தற்போது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் இரு தரப்புக்கும் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. அதனால் மீண்டும் குதிரைப் பேரம் பலமாக நடக்கும் சூழல் உருவாகியுள்ளது என்கிறார்கள் பொதுமக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism