Published:Updated:

`இது என் தொகுதி மக்களுக்குக் கிடைத்த மரியாதை’ - ஸ்டாலின் மேடையில் அமரச் சொன்னது குறித்து வானதி சீனிவாசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசு விழாவில் வானதி சீனிவாசன், ஸ்டாலின்
அரசு விழாவில் வானதி சீனிவாசன், ஸ்டாலின்

``என் மனதில் வருத்தம் இருந்தது உண்மைதான். நான் கீழே அமர்ந்ததை அமைச்சர்கள் பார்த்து முதல்வரிடம் கூறினர்” - வானதி சீனிவாசன்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று கோவை மாவட்டம் வந்தார். விழா நடைபெறும் அரங்கில், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது. முதல்வர் நிகழ்ச்சியில், மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மு.க.ஸ்டாலின், கருணாநிதி என எந்தத் தலைவரின் படமும் இடம்பெறவில்லை.

கோவை அரசு விழா
கோவை அரசு விழா

இந்த நிலையில் முதல்வர் விழாவில் கலந்துகொள்ள பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வருகை தந்தார். அப்போது வானதி சீனிவாசனை, மேடைக்கு வந்து அமருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, வானதி சீனிவாசனுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டு அமரவைக்கப்பட்டார்.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசனிடம் இது குறித்து நாம் பேசியபோது, "இது கட்சி விழா கிடையாது. அரசாங்க விழா. சட்டமன்றத்தில் தொகுதி சார்பாக என்ன கேட்டேனோ, அப்போதே அதை முதல்வர் நிறைவேற்றுகிறேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வந்திருக்கிறார். நான் இந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதி. நடப்பது அரசு விழா. இப்படித்தான் அதைப் பார்க்கிறேன்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

ஆனாலும்கூட இதற்கான அழைப்பிதழ் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. கேட்டதற்கு அழைப்பிதழே அடிக்கவில்லை என்றனர். மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மூலம், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருக்கிறோம் என்று என்னையும் அழைத்தனர். அழைப்பிதழ் கையில் இல்லை என்பது ஒரு மாதிரிதான் இருந்தது. 10 எம்.எல்.ஏ-க்களும் எதிர்க்கட்சி என்பதால், அவர்கள் பெயர்களைப் போட விரும்பவில்லை என்று புரிந்துகொண்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அண்ணாமலை எதிர்கொள்வார்!'' - வானதி சீனிவாசன் ஓப்பன் டாக்

தனிப்பட்ட அவமானங்களைக் கடந்து, என்னுடைய மக்களின் நலன் முக்கியம் என்பதால் கலந்துகொண்டேன். எனக்கு கீழேதான் இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுடைய தொகுதியில் நடக்கும் ஓர் அரசு நிகழ்ச்சியில், என்னைக் கீழே அமரவைத்து நடத்துவதுதான் அவர்களின் அரசியல் நாகரிகம் என்று நினைத்துக்கொண்டு சென்றேன். முதலில் நாடு, பிறகுதான் கட்சி என்பதைப் பயின்று வந்தவள் நான்.

முதல்வர் ஸ்டாலின் - வானதி சீனிவாசன்
முதல்வர் ஸ்டாலின் - வானதி சீனிவாசன்

என் மனதில் வருத்தம் இருந்தது உண்மைதான். நான் கீழே அமர்ந்ததை அமைச்சர்கள் பார்த்து முதல்வரிடம் கூறினர். உடனே என்னை மேலே அழைத்து அமரவைத்தனர். இதை என் தொகுதி மக்களுக்குக் கிடைத்த மரியாதையாகத்தான் பார்க்கிறேன். தனியாக எனக்குக் கிடைத்த மரியாதையாக பார்க்கவில்லை. மக்கள் நலத் திட்டங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து, இதை இன்னும் மேம்படுத்துவேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு