Published:Updated:

``மதமாற்றம் தொடர்பாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது!" - மாயாவதி

மாயாவதி

``இந்தப் பிரச்னையை சரியான கண்ணோட்டத்தில் பார்த்து புரிந்து கொள்வது அவசியம். இதில் செய்யப்படும் அடிப்படைவாத அரசியலால் நாட்டுக்கு நஷ்டம் தான் அதிகம் லாபமல்ல." - மாயாவதி

``மதமாற்றம் தொடர்பாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது!" - மாயாவதி

``இந்தப் பிரச்னையை சரியான கண்ணோட்டத்தில் பார்த்து புரிந்து கொள்வது அவசியம். இதில் செய்யப்படும் அடிப்படைவாத அரசியலால் நாட்டுக்கு நஷ்டம் தான் அதிகம் லாபமல்ல." - மாயாவதி

Published:Updated:
மாயாவதி

இந்தியாவில் மதமாற்றம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணமே இருக்கின்றது. அதிலும் கர்நாடகா, குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது. மேலும், உத்தரப்பிரதேசம், கர்நாடகா என அடுத்தடுத்து தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டங்களை பா.ஜ.க நிறைவேற்றிவருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி, மதமாற்றம் தொடர்பாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது எனக் கூறியிருக்கிறார்.

மாயாவதி
மாயாவதி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த மாயாவதி, ``கிறிஸ்மஸ் திருநாளில் அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மதத்தினரைப் போலவே, இவர்களும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வாழ வேண்டும். இதுவே எனது விருப்பம்.

மாயாவதி
மாயாவதி

மேலும், மதமாற்றம் தொடர்பாக நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது மற்றும் கவலையளிக்கக்கூடியது. வலுக்கட்டாயமாகச் செய்யப்படும் எல்லாமே தீயது. கெட்ட எண்ணத்துடன் மதம் மாறுவது தவறு. எனவே, இந்தப் பிரச்னையை சரியான கண்ணோட்டத்தில் பார்த்து புரிந்து கொள்வது அவசியம். இதில் செய்யப்படும் அடிப்படைவாத அரசியலால் நாட்டுக்கு நஷ்டம்தான் அதிகம் லாபமல்ல" என ட்வீட் செய்திருக்கிறார்.