Published:Updated:

``மே.வங்கம் வர முயன்றால் வங்காள விரிகுடாவில் முதலைகள் கடிக்கும்!" - பாஜக-வுக்கு மம்தா எச்சரிக்கை

மம்தா பானர்ஜி

``வங்காள விரிகுடாவைக் கடக்க நினைத்தால் முதலைகள் கடிக்கும்’’ என்று பாஜக-வுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

``மே.வங்கம் வர முயன்றால் வங்காள விரிகுடாவில் முதலைகள் கடிக்கும்!" - பாஜக-வுக்கு மம்தா எச்சரிக்கை

``வங்காள விரிகுடாவைக் கடக்க நினைத்தால் முதலைகள் கடிக்கும்’’ என்று பாஜக-வுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அந்த மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அவருடன் அவருக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜி என்பவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரது வீட்டிலிருந்து 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தனது வீட்டிலிருந்த பணம் அமைச்சருக்குச் சொந்தமானது என்று அர்பிதா விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார். அதோடு பணத்தை ஓரிரு நாள்களில் எடுத்துச்செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதைத் தனது கம்பெனியில் முதலீடு செய்ய திட்டமிட்டதாகவும் அர்பிதா விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

பார்த்தா சாட்டர்ஜி
பார்த்தா சாட்டர்ஜி

இதனால் பார்த்தா சாட்டர்ஜிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் கொல்கத்தாவுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். அவரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``நாட்டின் முன்னணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாட்டர்ஜியை அங்கிருந்து மத்திய அரசோடு தொடர்புடைய மருத்துவமனைக்கு ஏன் கொண்டு சென்றீர்கள்... உங்கள் நோக்கம்தான் என்ன... மேற்கு வங்க மக்களை அவமானப்படுத்தவா... என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்... மத்திய அரசு அப்பாவி, மாநிலங்கள் திருடர்களா... மாநிலங்களால்தான் நீங்கள் அங்கு இருக்கிறீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவால் இந்த முறை எதிர்த்து போராட முடியாமல் போயிருக்கலாம். மகாராஷ்டிராவுக்குப் பிறகு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் என அவர்கள் (பா.ஜ.க) சொல்கிறார்கள். இங்கு வர முயன்று பாருங்கள். வங்காள விரிகுடாவைக் கடக்க நினைத்தால் உங்களை முதலைகள் கடிக்கும். சுந்தர்பன் விலங்கியல் பூங்காவிலுள்ள ராயல் புலிகள் கடிக்கும். வடக்கு வங்காளத்தில் யானைகள் உங்களை விரட்டும்.

ஊழல் அல்லது வேறு எந்தத் தவற்றுக்கும் நான் துணை போக மாட்டேன். திருடனாக இருந்தாலும், கொள்ளைக்காரனாக இருந்தாலும் யாரையும் விட மாட்டேன். என் சொந்தக் கட்சியினரையே கைதுசெய்திருக்கிறேன். எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் அமைச்சர்களைக்கூட விட்டுவைப்பதில்லை. மத்திய விசாரணை ஏஜென்சிகளை வைத்து எங்கள் கட்சியை உடைத்துவிடலாம் என்று பா.ஜ.க நினைத்தால் அது தவறு. உண்மை வெளிச்சத்துக்கு வரும்" என்று தெரிவித்தார்.