Published:Updated:

``மகாத்மா காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம் இது" - கொட்டும் மழையில் ராகுல் பேச்சு

ராகுல் காந்தி ( ட்விட்டர் )

``பாஜக-ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பு மற்றும் வன்முறையை தடுக்கும் நோக்கில் நடத்தப்படும் பாரத் ஜோடோ யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது'' - ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து, மைசூருவில் நேற்று ஒரு பொதுக் கூட்டத்தில் மழையில் நனைந்த படி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``ஒரு நதியைப் போல, இந்த யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாயும். புயலோ மழையோ எதுவும் அதன் ஓட்டத்தை நிறுத்தாது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் பரப்பும் வெறுப்பு மற்றும் வன்முறையை தடுக்கும் நோக்கில் நடத்தப்படும் பாரத் ஜோடோ யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ட்விட்டர்

நமது பாரத் ஜோடோ யாத்திரை மகாத்மா காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம். காந்திஜி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடியது போல், காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் இன்று நாம் போராடுகிறோம். இந்த சித்தாந்தம் கடந்த எட்டு ஆண்டுகளில் சமத்துவமின்மை, பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது. பலத்த மழையிலும்ம் என்னுடைய பேச்சைக் கேட்டு ஆதரவளித்தத காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றி'' என்றார்.

ராகுல் காந்தி கனமழையில் நனைந்தபடி பேசிய வீடியோவை காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.