Published:Updated:

``எனக்கு அம்மாவின் பொறுப்பு; சுயநலவாதிகள் பற்றி கவலையில்லை!" - சி.ஆர்.சரஸ்வதி

கு.ஆனந்தராஜ்

ஜெயலலிதா அம்மா வகித்த பொறுப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது!

சி.ஆர்.சரஸ்வதி
சி.ஆர்.சரஸ்வதி ( vikatan )

டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.கவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் பலரும் மாற்றுக் கட்சிகளுக்கு அணி மாறிவருகின்றனர். இந்நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதிக்கு, கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சி.ஆர்.சரஸ்வதி
சி.ஆர்.சரஸ்வதி
vikatan

முக்கியப் பிரமுகர்கள் வெளியேறுவதால், கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக எழும் பேச்சுகள் மற்றும் புதிய பொறுப்பு குறித்து சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம்.

சுயநலத்துடன் அணி மாறிக்கொண்டே இருப்பவர்கள் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை.
சி.ஆர்.சரஸ்வதி

``எங்கள் கட்சியின் பலமே தொண்டர்கள்தான். உண்மையான தொண்டர்கள் இன்னும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். தனிப்பட்ட சுயநலத்துடன்தான் எங்கள் கட்சியிலிருந்து சிலர் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றிருக்கிறார்கள். தலைமையும் தொண்டர்களும்தான் ஓர் இயக்கத்திற்கு ஆணி வேர். இவை இரண்டும் எங்கள் கட்சிக்கு வலுவாகவே இருக்கின்றன. ஓர் இயக்கத்திற்கு கொள்கையுடன் வந்துவிட்டால், எல்லா வெற்றி தோல்விகளையும் ஒரே கண்ணோட்டத்தில் எதிர்கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும். அதைவிடுத்து, சுயநலத்துடன் அணி மாறிக்கொண்டே இருப்பவர்கள் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை.

ஜெயலலிதாவுக்கும் இதே பொறுப்புதான் வழங்கப்பட்டது. அவர் வகித்த பொறுப்பு எனக்குக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி
சி.ஆர்.சரஸ்வதி

1996-ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. அப்போது, இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் அ.தி.மு.க-விலிருந்து விலகி வேறு கட்சிக்குச் சென்றார்கள். ஆனாலும், கட்சியைப் பெரிய இயக்கமாக மாற்றிக்காட்டினாரே ஜெயலலிதா! அவருக்கு அப்போது, உண்மையான தொண்டர்கள் பக்கபலமாக இருந்தார்கள். அதே நிலைதான் இன்று எங்களுக்கும்!

பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 19 நாள்களிலேயே தீவிர களப்பணியாற்றி மூன்றாவது கட்சியாக வளர்ந்திருக்கிறோம். நம்பிக்கையுடன் வெற்றிப் பாதைக்கு வருவோம். உண்மையான விசுவாசிகள் எல்லோருக்கும் எங்கள் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். அப்படித்தான் எனக்கும் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சி.ஆர்.சரஸ்வதி
சி.ஆர்.சரஸ்வதி
vikatan

அரசியல் பயணத்துக்கு வந்தபோது ஜெயலலிதாவுக்கும் இதே பொறுப்புதான் வழங்கப்பட்டது. அவர் வகித்த பொறுப்பு எனக்குக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. எனவே, உண்மையான விசுவாசியாக அ.ம.மு.க கட்சியில் உற்சாகமாகப் பணியாற்றுவேன்" என்றார் சி.ஆர்.சரஸ்வதி.