Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: முதல் மேயர்.. முட்டிமோதும் கட்சிகள்; முந்தும் திமுக?! -கடலூர் மாநகராட்சி யாருக்கு?

கடலூர் மாநகராட்சி

கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு தகுந்தாற்போல ஊராட்சிகளை இணைக்கவில்லை. நகராட்சியில் இருந்த 45 வார்டுகள்தான் தற்போதும் நீடிக்கின்றன. அதனால்அப்பகுதி மக்களால் நகராட்சி தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி ரேஸ்: முதல் மேயர்.. முட்டிமோதும் கட்சிகள்; முந்தும் திமுக?! -கடலூர் மாநகராட்சி யாருக்கு?

கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு தகுந்தாற்போல ஊராட்சிகளை இணைக்கவில்லை. நகராட்சியில் இருந்த 45 வார்டுகள்தான் தற்போதும் நீடிக்கின்றன. அதனால்அப்பகுதி மக்களால் நகராட்சி தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.

Published:Updated:
கடலூர் மாநகராட்சி

கடலூர் மாநகராட்சி

தென்பெண்ணையாற்றின் வடக்கே இருந்த தொண்டை நாட்டுக்கும், வெள்ளாற்றின் தெற்கே இருந்த சோழ நாட்டிற்கும் நடுவில் அமைந்திருந்த நடுநாடுதான் தற்போதைய கடலூர். சோழர், பல்லவர், முகலாயர்கள் வரிசையில் பிரிட்டிஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் இந்த பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியிருக்கின்றனர்.

சென்னையில் பிரிட்டிஷ்காரர்கள் வசமிருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். அதனால் செஞ்சியை ஆட்சி செய்த மன்னர்களிடம் இருந்து ஏற்கெனவே வசப்படுத்தி கட்டியிருந்த கடலூர் செயின்ட் டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத்தின் தலைநகரை மாற்றிக் கொண்ட பிரிட்டிஷ்காரர்கள், இந்தியாவின் தென் பகுதியை அங்கிருந்து ஆட்சி செய்தனர். அதனால் இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் காலூன்றிய இடமாக மாறிப்போனது கடலூர். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியப் பேரரசுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சிறப்பும் இந்த மாநகரத்திற்கு உண்டு.

உள்ளாட்சி ரேஸ்: முதல் மேயர்.. முட்டிமோதும் கட்சிகள்; முந்தும் திமுக?! -கடலூர் மாநகராட்சி யாருக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாடலீஸ்வரர் கோயில், வரதராசப் பெருமாள் கோயில், 200 ஆண்டுகள் பழைமையான இயற்கை துறைமுகம், திருப்பாதிரிபுலியூர் மற்றும் முதுநகர் ரயில் நிலையங்கள், மெரீனாவுக்கு அடுத்த நீண்ட கடற்கரையை கொண்டிருக்கும் வெள்ளிக் கடற்கரை, நகரின் குறுக்கே துள்ளிக் குதித்து ஓடி வங்கக் கடலில் கலக்கும் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகள் போன்றவை இந்நகரத்தின் கூடுதல் சிறப்புகள்.

அதேசமயம் புவியியல் ரீதியாக இது வடிகால் மாவட்டமாக இருப்பதால் ஆண்டுதோறும் மழைவெள்ளம், புயல் என இயற்கை சீற்றங்களில் சிக்கிக்கொள்கிறது கடலூர். 1801-ம் ஆண்டு முதல் விழுப்புரத்தை உள்ளடக்கிய தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகராக இருந்த கடலூர், நிர்வாக வசதிகளுக்காக 1993-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதேபோல மாவட்ட வருவாய் கிராமத்தில் இருந்து 1866-ல் நகராட்சியாக மாற்றப்பட்டு, 1993-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2008-ம் ஆண்டு முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1959-ம் ஆண்டு 32 வார்டுகளுடன் இருந்த இந்த நகராட்சி தற்போது மக்கள் தொகை பெருக்கத்தால் 45 வார்டுகளாக பிரிக்கப்பட்டது. கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, 21.10.2021 அன்று கடலூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்தது. 2021 கணக்கெடுப்பின்படி இந்த மாநகராட்சியின் மக்கள் தொகை 1,98,987 பேர். மேலும் இந்த மாநகராட்சியில் 68,205 ஆண் வாக்காளர்கள், 74,225 பெண் வாக்காளர்கள், 49 திருநங்கைகள் என மொத்தம் 1,42,479 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

ஆறு மற்றும் சாலையோரம் கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகள்
ஆறு மற்றும் சாலையோரம் கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகள்

இந்த 45 வார்டுகளில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ். பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க, கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், சுயேச்சைகள் என 286 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். கடந்த 2011-ல் நடைப்பெற்ற நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றதால் அப்போதைய எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் சி.கே.சுப்பிரமணியன் நகரசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2014-ல் அவர் ராஜினாமா செய்ததால் அக்கட்சியின் கடலூர் நகரச் செயலாளராக இருந்த குமரன் நகரசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரச்னைகளும் சவால்களும்: 

மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு தகுந்தாற்போல ஊராட்சிகளை இணைக்கவில்லை. நகராட்சியில் இருந்த 45 வார்டுகள்தான் தற்போதும் நீடிக்கின்றன. அதனால் மாநகராட்சிக்கான தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அப்பகுதி மக்களால் நகராட்சி தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. முக்கிய சாலைகள் அனைத்தும் பஞ்சராகிக் கிடப்பதால் நகரம் முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தாததால் கழிவுநீர்கள் சாலைகளில் ஆறாக மாறி ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல கம்மியம்பேட்டை மற்றும் பச்சையாங்குப்பம் சிப்காட் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த குப்பைக் கிடங்குகளை மூடிவிட்ட நிலையில், மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் சுமார் 50 டன் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சி ரேஸ்: முதல் மேயர்.. முட்டிமோதும் கட்சிகள்; முந்தும் திமுக?! -கடலூர் மாநகராட்சி யாருக்கு?

மேலும் அந்த குப்பைகளை கெடிலம் ஆற்றின் கரையோரத்திலும், தெருக்களிலும் கொட்டி எரிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் கடுமையான சுகாதார சீர்கேட்டில் சிக்கியிருக்கிறது நகரம். பல இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து செல்வதும் அரங்கேறி வருகிறது. புதிய பேருந்து நிலையம் அமைக்க 18.4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அந்த திட்டம் தற்போதுவரை கிடப்பில் கிடப்பதால் போக்குவரத்து நெரிசலில் விழிபிதுங்கிக் கிடக்கிறது மாநகராட்சியின் சாலைகள்.

கேப்பர் மலை, திருவந்திபுரம், மற்றும், சாவடி தலைமை நீரேற்று நிலையங்களில் இருந்து மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுதவிர கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்தும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 178 ஊரக பகுதிகளுக்கும், 6 பேரூராட்சிகளுக்கும், ஒரு மாநகராட்சிக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான மொத்தத் தொகை ரூ.256 கோடி. அதில் மாநகராட்சியின் பங்கு மட்டும் 148 கோடி ரூபாய். திட்ட மதிப்பில் பாதிக்கு மேல் அதாவது 60% தொகையை வழங்கும் கடலூர் மாநகராட்சிக்கு சரியான குடிநீர் வழங்கப்படுவதில்லை. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான முந்தைய நகராட்சி மக்கள் தொகையின்படி நாளொன்றுக்கு 26.56 மில்லியன் எம்.எல்.டி (Million Litre Per Day) குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும்.

தி.மு.க வேட்பாளர் சுந்தரி
தி.மு.க வேட்பாளர் சுந்தரி

ஆனால் அதில் பாதியளவு கூட மேற்கண்ட நான்கு இடங்களில் இருந்தும் மக்களுக்கு கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் குழாய்கள் பதித்தலிலும். உள்கட்டமைப்பு வசதிகளை சரிவர மேற்கொள்ளாததும்தான். அதனை மாநகராட்சி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது மாநகராட்சிக்கு இருக்கும் சவால்களில் ஒன்று. அதேபோல கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் தலைமை நீரேற்றங்களில் இருந்து கடலூர் மாநகராட்சிக்கு வரும் குடிநீரில் அதிகப்படியான இரும்புத் தாதுக்கள் இருப்பதாகவும், அந்த தண்ணீரை தொடர்ந்து குடித்தால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறுகின்றன ஆய்வறிக்கைகள்.

தி.மு.க:

புதிய மாநகராட்சியின் முதல் மேயர் பதவி என்பதால் அதனை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென்று முனைப்பு காட்டிவருகிறது தி.மு.க. தமிழகத்தில் தற்போது தங்கள் கட்சிக்கு இருக்கும் ஆதரவு தங்களை வெற்றிபெற வைக்கும் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கும் தி.மு.க, அதற்காக வெறுங்கையுடன் வாக்கு கேட்கவில்லை. வைட்டமின் `ப’வை தாறுமாறாக இறைத்து வாக்காளர்களை வளைத்து வருகிறது. ”குடும்பத் தலைவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.1000/- உதவித்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்போம்” என்று பிரசாரத்தில் பேசிவருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.

கீதா குணசேகரன்
கீதா குணசேகரன்

அதேசமயம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அந்த மேயர் பதவியை அடைவதற்கு கட்சிக்குள்ளேயே இரண்டு கோஷ்டிகள் கடுமையாக பலப்பரீட்சை செய்துவருகின்றன. 45 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியின் மேயர் பதவியை கைப்பற்றுவதற்கு 23 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. அதனால் மேயர் ரேஸில் இருப்பவர்கள் தங்களுக்கு ஆதரவாக தலா இருபது வேட்பாளர்களை வளைத்து வைத்துக்கொண்டு வேண்டியதை செய்துவருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

நகரச் செயலாளரான கே.எஸ்.ராஜா தனது மனைவி சுந்தரியை 20-வது வார்டிலும், மாவட்ட பொருளாளரான வி.எஸ்.எல்.குணசேகரன் தனது மனைவி கீதாவை 2-வது வார்டிலும் களமிறக்கி விட்டிருக்கின்றனர். தனது ஆதரவாளர் என்பதால் கே.எஸ்.ராஜாவின் மனைவிக்கு ஆதரவாக நிற்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதனால்தானோ என்னவோ கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே வேட்புமனுவை தாக்கல் செய்த ராஜாவின் மனைவி சுந்தரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இருவருக்குமே சீட் கொடுத்து தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.

அ.தி.மு.க வேட்பாளர் சங்கீதா
அ.தி.மு.க வேட்பாளர் சங்கீதா

அதேசமயம் கே.ஸ்.ராஜா அடிதடி அரசியலுக்குப் பெயர் பெற்றவர் என்பதாலும், அவரின் மனைவி மேயரானால் நிழல் மேயராக கே.எஸ்.ராஜாதான் வலம் வருவார் என்பதால் வி.எஸ்.எல் குணசேகரன் பக்கம் நிற்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். அதேபோல கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் துணை மேயர் பதவியை குறிவைத்து காய்நகர்த்தி வருகின்றன.

சரி, அ.தி.மு.க நிலைதான் என்ன?

நகரச் செயலாளரும் இல்லாமல் ஒன்றியச் செயலாளரும் இல்லாமல் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை எதிர்கொள்ள வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறது அ.தி.மு.க. 27-வது வார்டில் களமிறங்கியிருக்கும் முன்னாள் நகரமன்ற துணை தலைவர் சேவல் குமாரின் மருமகள் சங்கீதாவும், 26-வது வார்டில் களமிறங்கியிருக்கும் எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட தலைவர் மாதவனின் மனைவி பிரியாவும்தான் மேயர் வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.

அ.தி.மு.க வேட்பாளர் பிரியா மாதவன்
அ.தி.மு.க வேட்பாளர் பிரியா மாதவன்

மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் கையைவிட்டு எதையும் கொடுக்காத நிலையில், மேயர் பதவியை குறிவைத்திருக்கும் சேவல் குமார் மற்றும் ’கெமிக்கல்’ மாதவனுக்கு தலா 15 வார்டுகளை ஒதுக்கி செலவுகளை பார்க்கும்படி கூறியிருக்கிறாராம். ஆளும் கட்சியாக இருந்தால் என்ன வைட்டமின் ‘ப’தான் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி என்று முழு வீச்சில் களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க. அதேபோல முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் தீவிர ஆதரவாளரும், நகர துணைச் செயலாளருமான கந்தன் தனது மனைவிக்கு துணைமேயர் பதவியை ’வாங்கி’ கொடுத்துவிட காய்நகர்த்தி வருகிறார்.

எனினும் ஆளும் கட்சி அந்தஸ்து, கட்டுப்பாடுகளின்றி விரையம் செய்யப்படும் வைட்டமின் ‘ப’ போன்றவற்றால் மேயர் ரேஸில் முந்திச் செல்கிறது தி.மு.க!