Published:Updated:

எடப்பாடிக்கு ஏன், எப்படி கூட்டம் கூடுகிறது?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக, பன்னீர் தரப்பால் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது

எடப்பாடிக்கு ஏன், எப்படி கூட்டம் கூடுகிறது?

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக, பன்னீர் தரப்பால் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகளுக்கு இடையிலான சட்ட யுத்தம் ஒருபுறம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், சுற்றுப்பயணத்தில் சுழன்றடிக்கும் விஷயத்தில் பன்னீரை ஓவர்டேக் செய்துகொண்டிருக்கிறார் எடப்பாடி. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அ.தி.மு.க கரைவேட்டிகளின் கூட்டம் களைகட்டுகிறது. ஆனால், `அது காசு கொடுத்து அழைத்துவரப்படும் கூட்டம்’ என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் பன்னீர் தரப்பினர். என்னதான் நடக்கிறது?

எடப்பாடிக்கு ஏன், எப்படி கூட்டம் கூடுகிறது?

பரபர பயணங்கள்!

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக, பன்னீர் தரப்பால் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இரு தரப்பிலும் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும் என ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், திண்டுக்கல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் என முதற்கட்ட சுற்றுப்பயணத்தைக் கடந்த வாரம் முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அடுத்ததாக, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குப் பிறகு, தூத்துக்குடியில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். அதை முடித்துவிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆரம்பித்து, அப்படியே புதுக்கோட்டை வழியாக டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பணம் செல்ல முடிவெடுத்திருக்கிறார். முதற்கட்டமாக, பழனியில் நடந்த பொதுக்கூட்டத்திலும் சரி, அவர் பரபரவெனச் சுற்றுப்பயணம் செய்யும் மாவட்டங்களிலும் சரி... கூட்டம் களைகட்டுகிறது. அதனால், “எங்களுக்குத்தான் செல்வாக்கு இருக் கிறது” என எடப்பாடி தரப்பு கூற, “கூடுவதெல்லாம் அ.தி.மு.க தொண்டர்களே இல்லை” என பதிலடி கொடுத்துவருகின்றனர் ஓ.பி.எஸ் தரப்பினர்.

எடப்பாடிக்கு ஏன், எப்படி கூட்டம் கூடுகிறது?

“தனிக்கட்சிக்கான பயணம் அது!”

ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் இது குறித்துப் பேசும்போது, ``முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். எடப்பாடி பழனிசாமி தற்போது செய்துவரும் சுற்றுப்பயணம், அ.தி.மு.க-வின் சுற்றுப்பயணம் அல்ல. இடைக்காலப் பொதுச்செயலாளர் என்கிற பதவி இன்னும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு எதிரான முடிவுகள் வந்தால், தனிக்கட்சியாகச் செயல்படு வதற்காகத்தான் அவர் மாவட்டம், மாவட்டமாகச் சென்றுகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டங் களுக்கு அ.தி.மு.க-வின் அடிப்படைத் தொண்டர் கள், கிளைக் கழக, ஒன்றியக் கழக நிர்வாகிகள் யாரும் செல்வதில்லை. கூலி வேலைக்குச் செல்கிற மக்களை, அண்டா, எவர்சில்வர் பாத்திரங்கள், சேலை, வேட்டி சட்டை என ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் செலவழித்துக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். இதைவைத்துக் கொண்டு தங்களுக்குத்தான் செல்வாக்கு இருப்பதாகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையான தொண்டர்கள் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பது அண்ணன் ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் செல்லும்போது தெரியவரும்’’ என்றார்.

60/40 கணக்கு!

மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் இது குறித்துப் பேசினோம். ``எடப்பாடி - பன்னீர் இருவருமே தாங்களாக உருவான தலைவர்கள் கிடையாது. அவசர, அவசியத் தேவைக்காகத் தலைமையில் இருந்தவர்களால், இந்தப் பொறுப்பு களுக்கு வந்தவர்கள். ஆனால், எடப்பாடி முதல்வராக இருந்த நான்காண்டுகளில் மக்கள் செல்வாக்கை எப்படிப் பெறுவது என்று யோசித்ததைவிட, கட்சியை எப்படித் தன் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தி, அதில் சாதித்தும்விட்டார். முதல் இரண்டு ஆண்டுகள் பன்னீரை ஓரங்கட்டு வதிலும் பா.ஜ.க-வை அட்ஜஸ்ட் செய்வதிலும்தான் அவர் அக்கறை செலுத்தினார். 2019 நாடாளு மன்றத் தேர்தலின்போது, முதன்முறை வெளியில் சுற்றுப்பயணம் போன எடப்பாடி, தனியாக ரோட்டில் கை காட்டிக்கொண்டு போன புகைப் படமெல்லாம் வெளியானது. அந்த அளவுக் குத்தான் அவருக்குச் செல்வாக்கு இருந்தது. ஆட்சியில் இருக்கும்போது எடப்பாடி பழனிசாமியால் ‘பலன்’பெற்ற ஒன்றிய, மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள்தான் தற்போது கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். தவிர, கவுண்டர்கள், வன்னியர்கள் எனச் சமூக ரீதியாகவும் கூடுகிறார்கள். பணம் கொடுத்து கூட்டப்படுகிறது என்பதிலும் உண்மை இல்லாமலில்லை. வருபவர்களில் 60 சதவிகிதம் அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும். மீதம் நாற்பது சதவிகிதம் பணம் பெற்றுக்கொண்டு வருகிறவர்கள்தான். ஆனால், இந்தக் கூட்டம் தற்காலிகமானதுதான். உயர் நீதிமன்றத்திலோ, தேர்தல் ஆணையத்திலோ பன்னீருக்குச் சாதக மாக ஏதும் முடிவுகள் வந்தால், நிர்வாகிகள் அப்படியே பன்னீர் பக்கம் ஷிஃப்ட் ஆகி விடுவார்கள். தவிர, இந்தக் கூட்டம் வாக்குகளாக வும் மாறாது’’ என்றார் அவர்.

எடப்பாடிக்கு ஏன், எப்படி கூட்டம் கூடுகிறது?

“ஆளுமைக்காகக் கூடும் கூட்டம்!”

இறுதியாக, எடப்பாடி ஆதரவாளரான சிவசங்கரியிடம் மேற்கண்ட விஷயங்களை முன்வைத்தோம். “காசு கொடுத்தெல்லாம் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்ட முடியாது. அப்படியென்றால் சசிகலா, தினகரனிடம் இல்லாத பணமா, அவர்களால் ஏன் கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை... எடப்பாடியாருக்குக் கூடு வது சாதாரண கூட்டமல்ல. கட்சியின் தலைவர் எடப்பாடியார்தான் என்று திரள்கிற கூட்டம் அது. அவர்மீதான அன்பால், அவர் ஆளுமை மீதான மரியாதையால் கூடுகிற கூட்டம் அது. அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்ல, இந்த ஆட்சியால் அதிருப்தியிலிருக்கும் மக்களும் எடப்பாடியாரைப் பார்க்க வருகிறார்கள். இந்தக் கூட்டம் நிற்காது என்று சொல்பவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம். இதேபோலத்தான் எடப்பாடியாரின் ஆட்சியும் நிற்காது என்று சொன்னார்கள், கடைசியில் என்ன நடந்தது... எடப்பாடியாரின் ஆட்சி தொடர்ந்திருக்கலாம் என்றுதான் தற்போது தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்துக் கொண்டிருக் கிறார்கள். பேசிப் பேசி சசிகலா, தினகரன் ஓய்ந்ததுபோல, பன்னீர் தரப்பினரும் ஓய்ந்து போவார்களே தவிர, ஒன்றும் நடக்கப்போவ தில்லை’’ என்றார் ஆக்ரோஷமாக.

கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது பெரிய கேள்வி. ஆனால், ‘கூடுகிற கூட்டமே உண்மையா?’ என்கிற பட்டிமன்றம் நடக்கிறது. தமிழக அரசியலில் இன்னும் பல சுவாரஸ்யக் காட்சிகளுக்கு வாய்ப்பிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!