‘என்னை முதலமைச்சராக்க வேண்டும்’ என்று 18 எம்.எல்.ஏ-க்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து, அவர் ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

தொடர்ந்து முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு நாளுக்கு நாள் புதுப்புதுக் குடைச்சல்களைக் கொடுத்துவருகிறது மத்திய பா.ஜ.க அரசு.

கடந்த வாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் நடந்துகொண்டிருந்தபோது, கெலாட் மகனின் வியாபாரப் பங்குதாரரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தியது. அப்போது பெரிதாக எதுவும் சிக்கவில்லை. ஏற்கெனவே 2009-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கெலாட்டின் சகோதரர் அகர்சன் கெலாட் நடத்தும் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தது. அதை இப்போது தூசுதட்டத் தொடங்கியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு.

இந்த நிறுவனத்தின் ஜோத்பூர், டெல்லி, குஜராத், கொல்கத்தா அலுவலகங்களில் ஜூலை 22-ம் தேதி அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. ‘‘அந்த வழக்குக்காக 2013-ம் ஆண்டில் 61 கோடி ரூபாய் அபராதம் கட்டியிருக்கிறோம். அபராதத்தை எதிர்த்து டிரிபியூனலில் வழக்கும் தொடர்ந்துள்ளோம்’’ என்கிறது அகர்சன் கெலாட் தரப்பு.

இதற்கிடையே காங்கிரஸின் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கிளப்பிய குற்றச்சாட்டு பா.ஜ.க-வை அதிர வைத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் மகளும், உமர் அப்துல்லாவின் சகோதரியுமான சாரா அப்துல்லாவைத்தான் சச்சின் பைலட் மணம் முடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை விலக்கிக்கொள்ள மத்திய அரசு சட்டம் இயற்றியபோது, முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, அவரின் மகன் உமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஏழு மாதங்களுக்குப் பிறகு மார்ச் மாதம்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மெகபூபா முஃப்தி இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய பூபேஷ் பாகல், ‘‘சச்சின் பைலட்டின் மாமனார், மைத்துனர் என்பதால்தான் ஃபரூக் அப்துல்லாவும், உமர் அப்துல்லாவும் விடுவிக்கப்பட்டனரா?’’ என்ற கேள்வியை எழுப்பி, புதிய சர்ச்சையைத் தொடங்கி வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, `பூபேஷ் பாகல் மீது வழக்கு தொடரப்படும்’ என்று உமர் அப்துல்லா ட்விட்டர் பதிவை வெளியிட்டார். ‘காஷ்மீர் விவகாரத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இப்படியான சூழலில் பூபேஷ் பாகலின் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைமையும் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.

இன்னொருபுறம், ‘சபாநாயகர் கொடுத்துள்ள 19 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான தகுதிநீக்க நோட்டீஸ்மீது நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கினால், அனைவரையும் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகர் தயாராகிவருகிறார்’ என்று ஜெய்ப்பூரிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அரசியலில் எதுவும் நடக்கலாம்... பார்ப்போம்!